ஞானவாபி மசூதியில் சிவலிங்கத்தை வழிபடலாமா - நீதிமன்றத்தின் பரபரப்பான தீர்ப்பு இன்று
ஞானவாபி மசூதியில் உள்ள சிவலிங்கத்தை வழிபட அனுமதி கோரும் வழக்கின் மீது இன்று வாரணாசி நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது.;
ஞானவாபி மசூதியில் உள்ள சிவலிங்கத்தை வழிபட அனுமதி கோரும் வழக்கின் மீது இன்று வாரணாசி நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது.
உத்தரப்பிரதேசத்தின் முக்கிய அடையாளங்களில் மிக முக்கியமான இடம் காசி. இந்துக்களின் புனித யாத்திரை நடக்கும் மிக முக்கியமான முதன்மையான தலம், இந்த காசி விசுவநாதர் ஆலயத்தை சுற்றி ஏராளமான மேம்பாட்டுப் பணிகள் செய்யப்பட்டிருக்கின்றன.
அதே நேரத்தில் ஞானவாபி மசூதி இல் சிவலிங்கம் கண்டெடுத்த விவகாரம் பூதாகரமாக வெடித்தது. அந்த மசூதியின் வெளிப்புறத்தில் அம்மன் சிலையை வழிபட வேண்டும் என்று ஐந்து பெண்கள் வழக்கு தொடர்ந்து விவாத பொருளானது. தற்போது அங்கு சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்ட வழக்கில் வாரணாசி நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.