தடுப்பூசிகள் இறுதி கட்ட பரிசோதனை - மக்களை காக்கும் முயற்சியில் மத்திய அரசு வெற்றி! பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரை!
தடுப்பூசிகள் இறுதி கட்ட பரிசோதனை - மக்களை காக்கும் முயற்சியில் மத்திய அரசு வெற்றி! பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரை!
நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார் பிரதமர் மோடி. கொரோனா காலத்தில் இதுவரை 6 முறை உரையாற்றி உள்ளார். இன்று ஏழாவது முறையாக நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார். அப்போது பேசிய அவர், கொரோனாவுக்கு எதிராக இந்தியா வலுவாக போராடி வருகிறது. ஊரடங்கு தளர்த்தப்பட்டு நாட்டு மக்கள் வீடுகளில் இருந்து வெளியே வரத் தொடங்கி உள்ளனர்.
நாட்டின் நிலைமை ஸ்திரதன்மையோடு உள்ளது. நாட்டின் பொருளாதாரம் படிபடியாக மேம்பட்டு வருகிறது. நாடு கொரோனா பாதிப்பில் இருந்து வேகமாக மீண்டு வருகிறது. கொரோனா பாதிப்பு குறைந்தாலும், ஆபத்து இன்னமும் முழுமையாக நீங்கவில்லை. அமெரிக்கா, பிரேசிலில் கொரோனா தாக்கம் அதிகரித்து வருகிறது.
தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் வருவதால் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கொரோனா நோயாளிகளுக்காக 90 லட்சத்திற்கும் மேற்பட்ட படுக்கை வசதிகள் தயாராக உள்ளது. வெளிநாடுகளை விட இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு கட்டுப்படுத்தப்பட்டு குறைக்கப்பட்டுள்ளது.
மக்களை காக்கும் முயற்சியில் மத்திய அரசு வெற்றி கண்டுள்ளது. கொரோனா தாக்கம் குறைந்து வருவதால் மக்கள் அலட்சியமாக இருந்து விடக்கூடாது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மக்கள் புறக்கணிக்க கூடாது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மக்கள் தொடர்ந்து கடை பிடிக்க வேண்டும்.
வீடுகளில் இருந்து வெளியே வருவோர் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும். முகக் கவசம் அணியாமல் வெளியே வருவது அவர்களின் குடும்பத்திற்கே ஆபத்தாக முடியும். பல நாடுகளில் கொரோனா இரண்டாவது அலை வீசத் தொடங்கி உள்ளது.
கொரோனா இரண்டாவது அலைக்கு எதிராக பல நாடுகள் போராடத் தொடங்கி உள்ளன. தடுப்பூசி கண்டறியப்பட்டு, வினியோகிக்கப்படும் வரை கொரோனாவுக்கு எதிரான போர் தொடரும். உலக நாடுகள் கொரோனா தடுப்பூசியை கண்டறிவதில் மும்முரமாக உள்ளன.