ஜார்க்கண்ட்: பசுக்கள் படுகொலை செய்வதைத் தடுத்த முஸ்லீம் இளைஞர் அதே சமூகத்தைச் சேர்ந்தவர்களால் கொலை.!

ஜார்க்கண்ட்: பசுக்கள் படுகொலை செய்வதைத் தடுத்த முஸ்லீம் இளைஞர் அதே சமூகத்தைச் சேர்ந்தவர்களால் கொலை.!

Update: 2020-10-21 15:47 GMT

ஜார்காண்ட் மாநிலத்தில் ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவமாக, மாநிலத்தில் கார்வாஹ் மாவட்டத்தைச் சேர்ந்த முஸ்லீம் இளைஞரை அதே சமூகத்தைச் சேர்ந்த இரண்டு நபர்கள் கொலை செய்துள்ளனர். அந்த இளைஞன் பசுக்கள் படுகொலை செய்வதில் இருந்து தடுத்ததற்காக அவனைக் கொலை செய்துள்ளனர்.

இந்த சம்பவமானது திங்கட்கிழமை அன்று இரவு கார்வாஹ் மாவட்டத்தில் உச்சாரி கிராமத்தில் நடந்துள்ளது என்று காவல்துறை அறிக்கை தெரிவிக்கின்றது. கொல்லப்பட்ட இளைஞர் 18 வயதுடைய மொஹம்மத் அர்ஸூ என்று தெரியவந்துள்ளது. கொலைசெய்தவர்கள் அதே சமூகத்தைச் சேர்ந்த முன்னு குரேஷி மற்றும் கைல் குரேஷி தற்போது அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.  தொண்டை பகுதியில் வெட்டி கொலைசெய்துள்ளனர். தற்போது உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

மாநில குடிநீர் துறை அமைச்சர் மிதிலேஷ் தாகூர் செவ்வாய்க்கிழமை அன்று கிராமத்திற்குச் சென்று நடந்த சம்பவம் குறித்த தகவல்களை மேலும் கேட்டறிந்தார். இறந்த மகனுக்கு நீதி கோரி நிற்கும் தாய், "என் மகன் மாடுகள் படுகொலை செய்யப்படுவதை மக்களிடம் இருந்து தடுப்பான். அதனால் எங்கள் சொந்த சமூகத்தைச் சேர்ந்தவர்களிடம் இருந்து எதிர்ப்புகளைப் பெற்றான். தற்போது திங்கட்கிழமை அன்று இரு நபர்கள் என் மகனைக் கொலை செய்துவிட்டனர், " என்று தனது துக்கத்தை வெளிப்படுத்தினார்.

அறிக்கையில், இந்த கொலை சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான கைல் குரேஷி விலங்குகளைக் கொலை செய்யும் கூர்மையான கத்தியினால் பலரைத் தாக்கும் கொடூரமான செயல் புரிபவர். இவர் முன்னர் அவரது குடும்பத்தினரையே பல முறை தாக்கியுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

Similar News