காஷ்மீர்: குடும்பத்தினர் வேண்டுகோளை அடுத்துப் சரணடைந்த இரு பயங்கரவாதிகள்.!

காஷ்மீர்: குடும்பத்தினர் வேண்டுகோளை அடுத்துப் சரணடைந்த இரு பயங்கரவாதிகள்.!

Update: 2020-10-23 16:21 GMT

ஜம்மு&காஷ்மீரில் வியாழக்கிழமை அன்று புதிதாக உருவெடுத்த இரண்டு பயங்கரவாதிகள் அவர்களின் பெற்றோர்கள் ஆயுதங்களைக் கீழே போடுமாறு கேட்டுக்கொண்டதை அடுத்து காஷ்மீர் பாதுகாப்புப் படைக்கு முன்னர் சரணடைந்தாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


வடக்கு காஷ்மீரில் சோப்பூரில் ஷல்போரா துஜார் ஷரீஃப் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி உள்ளதாக காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்தது, அதனை அடுத்து இராணுவப்படையும் CRPF வீரர்களும் இருவரும் இணைந்து தேடுதல் பணியில் ஈடுபட்டனர். தேடுதல் பணியின் போது தீவிரவாதிகள் இருப்பதை உறுதி செய்ததால் அவர்களுக்குச் சரணடைய வாய்ப்பு தந்தாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சிறைபிடித்த தீவிரவாதிகளைச் சரணடையக் கூறுவதற்கு அவர்களது குடும்பத்தினர் என்கவுண்டர் இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர். "குடும்பத்தினரின் தொடர் வேண்டுகோளாலும் மற்றும் பாதுகாப்புப் படையினரின் தொடர் முயற்சியாலும் தீவிரவாதிகள் படையினருக்கு முன்பு சரணடைந்தனர். மேலும் சிறைபிடிக்கப்பட்ட தீவிரவாதிகள் அபி முஷ்டாக் தார் மற்றும் மெஹ்ராஜ்-உ-தின் தார் என்று தெரியவந்துள்ளது. அவர்கள் இருவரும் சோப்பூரில் போமாய் பகுதியில் வடூரா பகுதியில் வசிக்கின்றனர்," என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

"அவர்களது ஆயுதங்கள் விடுத்து மற்றும் சரணடையும் தீவிரவாதிகளுக்கு எங்களது ஆதரவு எப்பொழுதும் இருக்கும்." என்று காஷ்மீர் IGP விஜய் குமார் கூறியுள்ளார். மேலும் "அவர்களும் எங்கள் நாட்டு மக்கள் என்பதால் பயங்கரவாதிகளுக்கு எப்பொழுதும் என்கவுண்டருக்கு முன்பு ஒரு வாய்ப்பை வழங்குவோம்," என்றும் அவர் தெரிவித்தார்.

Similar News