நேபாளத்தில் சட்டவிரோதமாகப் பல இடங்களைச் சீனா ஆக்கிரமிப்பு - இந்தியப் புலனாய்வு அமைச்சகம் எச்சரிக்கை.!
நேபாளத்தில் சட்டவிரோதமாகப் பல இடங்களைச் சீனா ஆக்கிரமிப்பு - இந்தியப் புலனாய்வு அமைச்சகம் எச்சரிக்கை.!
நேபாளத்தில் உள்ள சில மாவட்டங்களில் பல இடங்களைச் சீனா சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பு செய்துள்ளது உள்ளது குறித்து இந்தியப் புலனாய்வு அமைச்சகம் புது டெல்லியில் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நேபாளத்தின் எல்லையில் பல இடங்களை ஆக்கிரமிப்பு செய்வதன் மூலம் பெய்ஜிங் அதிவேகத்தில் முன்னேறி வருகின்றது என்று புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது. "சீன கம்யூனிஸ்ட் கட்சியின்(CCP) நில ஆக்கிரமிப்பு குறித்து நேபாள கம்யூனிஸ்ட் கட்சி(NCP) மறைப்பதால் உண்மையில் நிலைமை இன்னும் மோசமாகின்றது," என்று உள்நாட்டுப் புலனாய்வு அமைச்சகத்தின் அறிக்கை தெரிவிக்கின்றது. மேலும், சீனாவின் நேபாள நில ஆக்கிரமிப்பைப் பிரதமர் KP சர்மா ஓலி மறுத்தது குறித்தும் நேபாளத்தின் சர்வே துறை குறித்தும் அறிக்கை பேசியுள்ளது.
டொலஹா, கோர்கா, தார்ச்சுலா, கும்லா, சிந்துபல்சோவ்க், சங்குவாசபா மற்றும் ராசுவா உள்ளிட்ட நேபாள மாவட்டங்கள் சீனாவின் ஆக்கிரமிப்பு திட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ளன என்று அந்த அறிக்கை தெரிவிக்கின்றது. மேலும் டொலஹா கோரலங் பகுதியில் அமைந்துள்ள எல்லை தூண் 57 நகர்த்தி நேபாளத்தில் சர்வதேச எல்லையில் 1500 மீட்டரை சீனா விரிவாக்கம் செய்துள்ளது. டொலஹா போன்று, கோர்க்கா மாவட்டத்தில் இருக்கும் எல்லை தூண் எண்கள் 35, 37 மற்றும் 38 இடங்களையும் பன்ஜியாங்கில் உள்ள எல்லை தூண் 62 இடத்தையும் சீனா மாற்றியுள்ளது.
மேலும், அந்த கிராமங்கள் நேபாளத்தில் உள்ளடங்குகின்றது என்று நேபாளத்தின் அதிகாரப்பூர்வ வரைபடங்கள் தெரிவிக்கின்றன மற்றும் அந்த கிராமத்தில் இருக்கும் மக்கள் நேபாள அரசுக்கு வரிகளைச் செலுத்தி வந்தாலும், சீனா அந்த பகுதிகளை ஆக்கிரமித்து மற்றும் 2017 இல் அதனைச் சீன பகுதியுடன் இணைத்துள்ளது. நேபாளத்திற்குச் சொந்தமான பல்வேறு குடியிருப்புகள் சீனாவால் ஆக்கிரமிக்கப்பட்டு தற்போது சீன எல்லைக்குள் இணைக்கப்பட்டுள்ளது.