பிளே ஸ்டோரில் தடைசெய்யப்பட்ட மூன்று ஆப்கள் - கூகுள் அதிரடி நடவடிக்கை.!

பிளே ஸ்டோரில் தடைசெய்யப்பட்ட மூன்று ஆப்கள் - கூகுள் அதிரடி நடவடிக்கை.!

Update: 2020-10-26 07:53 GMT

கூகுள் பிளே ஸ்டோர் தன்னுடைய டம்ஸ் அண்ட் கண்டிஷனிங்களை மீறும் ஆப்களை அவ்வப்பொழுது கூகுள் தன்னுடைய பிளே ஸ்டோரிலிருந்து நீக்குகிறது. சமீபத்திய நிகழ்வில், சர்வதேச டிஜிட்டல் பொறுப்புக்கூறல் கவுன்சிலின் (IDCA) மூலம் செய்திகளை பெற்ற பிறகு, ஆண்ட்ராய்டு தயாரிப்பாளர் பிளே ஸ்டோரிலிருந்து குழந்தைகள் பயன்படுத்தும் மூன்று பிரபலமான மூன்று செயலிகள் அதாவது ஆப்புகளை தற்போது தடை செய்துள்ளது.



 

இளவரசி வரவேற்புரை, நம்பர் கலரிங் மற்றும் கேட்ஸ் & காஸ்ப்ளே என அடையாளம் காணப்பட்ட மூன்று செயலிகளை, பிளே ஸ்டோர் கண்டிஷன்களை மீறி, பெரும்பாலான சந்தர்ப்பங்களில் இந்த மாதிரியான ஆப்களை பயன்படுத்தும் குழந்தைகளின் செய்திகளைச் சேகரிப்பதாக IDCA கண்டறிந்தது. இதைப்பற்றி IDCA கூறுகையில், "எங்கள் ஆராய்ச்சியில் நாங்கள் கவனித்த நடைமுறைகள் இந்த பயன்பாடுகளுக்குள் சிறு குழந்தைகள் கூட விஷயங்களை இத்தகைய செயலிகள் சேகரிப்பது குறித்து கடுமையான கவலைகளை எழுப்பின" என்று IDCA தலைவர் குவென்டின் பால்ஃப்ரே டெக் கூறினார்.



 

இதைப்பற்றி கூகுள் தரப்பில் கூறுகையில்,  "நாங்கள் எங்களுடைய ப்ளே ஸ்டோரிலிருந்து இத்தகைய ஆப்களை தடை செய்துள்ளோம் மேலும் குழந்தைகளின் தரவுகளை சேகரிக்கும் எந்த செயலியையும் நாங்கள் அனுமதிப்பது கிடையாது என்றும் கூகுள் தரப்பில் கூறப்பட்டுள்ளது".

எனவே இத்தகைய ஆப்கள் குழந்தைகளின் விவரங்களை சேகரிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் எந்த மாதிரியான தகவல்களைச் சேகரிக்கின்றன. அவற்றை இதற்காக பயன்படுத்துகின்றன என்பது இப்பொழுது வரையும் தெளிவுபடுத்தப்படவில்லை. எனவே இத்தகைய செயலிகள் கூகுள் மற்றும் ஆப்பிள் ஸ்டோர்களில் இருந்து முழுமையாக நீக்கப்பட வேண்டும் என்றும் பல்வேறு தரப்புகளில் இருந்து கோரிக்கைகள் எழுந்துள்ளன.

Similar News