சீனாவுடன் போர் உண்மையா? இல்லையா? - பா.ஜ.க தலைவர் விளக்கம்.!
சீனாவுடன் போர் உண்மையா? இல்லையா? - பா.ஜ.க தலைவர் விளக்கம்.!
நம் அண்டை நாடுகளான பாகிஸ்தான் மற்றும் சீனாவுடன் போரிட பிரதமர் நரேந்திர மோடி முடிவு செய்துள்ளதாக உத்தரபிரதேச மாநிலத்தில் பா.ஜ.க தலைவர் ஸ்வதந்திர தேவ் சிங் அவர்கள் கூறியுள்ள கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உத்தரப் பிரதேசத்தின் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க ஆட்சி அமைந்துள்ளது இந்நிலையில் பா.ஜ.க தலைவர் ஸ்வதந்திர தேவ் சிங் அவர்களின் பரபரப்பு கூடிய பேச்சு அடங்கிய, ஒரு வீடியோ நேற்று சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வைரல் ஆனது.
அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பது என்னவென்றால் ராமர் கோவில் கட்டுமான பணிகளை துவங்கியது மற்றும் ஜம்மு அண்ட் கஷ்மிர் சிறப்பு அதிகாரம் வழங்கிய சட்டப்பிரிவை ரத்து செய்தது போலவே எல்லை பிரச்சினையில் நம் தேசத்துடன் தகராறு செய்யும் சீனா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுடன் எப்பொழுது போரிட வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி முடிவு செய்துள்ளார். அதற்கான தேதியில் அவர் தீர்மானித்துள்ளார் என்பது போன்ற பரபரப்பான தகவல்கள் இந்த வீடியோ பெரும் வைரலாகி உள்ளது.
இவர்களுடைய இந்த பேச்சு உத்திரப்பிரதேச மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து உ.பி இன் சலேம்பூர் லோக்சபா தொகுதி - பா.ஜ.க, எம்.பி ரவீந்திர குஷ்வாஹா கூறுகையில் "கட்சித் தொண்டர்களை ஊக்கப்படுத்துவதற்காக ஸ்வதந்திர தேவ் சிங் இதுபோல் பேசியுள்ளார்" என்று அவர் கூறியுள்ளார்.