எல்லைப் பகுதிகளில் வீரர்கள் விஜயதசமி விழா கொண்டாட்டம் - பாதுகாப்பு அமைச்சர் பங்கேற்பு!
எல்லைப் பகுதிகளில் வீரர்கள் விஜயதசமி விழா கொண்டாட்டம் - பாதுகாப்பு அமைச்சர் பங்கேற்பு!
இந்தியா-சீனா இடையே எல்லைப் பகுதிகளில்முன் எப்போதும் இல்லாத வகையில் பதற்றம் நிலவுகிறது. இந்த சூழ்நிலையில் எல்லைப்பகுதிகளில் பணிபுரியும் நம் இந்திய வீரர்கள் பனியும் , மழையும் மிகுந்த காட்டுப் பகுதிகளில் நம் தாய் நாட்டை பாதுகாக்க இரவு பகலாக கண் விழித்து வருகின்றனர்.
இந்த நிலையில் சிக்கிம் பகுதி எல்லையில் பணிபுரியும் நம் ராணுவ வீரர்கள் விஜயதசமி நிகழ்ச்சியை மிக சிறப்பாக கொண்டாடடினர்.
இந்த விழாவில் பங்கேற்க நம் இராணுவத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சிக்கிம் சென்றார். ராணுவ வீரர்களுடன் மிக சிறப்பான முறையில் பூஜை கொண்டாடினார்.
சீன எல்லைக்கு அருகிலுள்ள நாதுலா பாஸில் ராணுவ தலைமை ஜெனரல் எம்.எம். நர்வானேவுடன் இணைந்து ராஜ்நாத் சிங் படையினருடன் ஆயுத பூஜை கொண்டாடினார். பின்னர் அவர் நாதுலா பாஸுக்கு அருகிலுள்ள படையினரை சந்தித்துப் பேச சென்றார்.
மேலும், பதற்றம் மிகுந்த பகுதிகளில் இந்தியா ஏராளமான வீரர்களையும் பீரங்கிகளையும் நிறுத்தியுள்ள பல இடங்களையும் அவர் பார்வையிட்டார்.
மேலும் சிக்கிம் எல்லையில் புதிதாக அமைக்கப்பட்ட இராணுவ முக்கியத்துவம் மிகுந்த சாலையை பாதுகாப்பு அமைச்சர் டார்ஜிலிங்கில் உள்ள சுக்னாவிலிருந்து, வீடியோ கான்பரன்சிங் மூலம் திறந்து வைத்தார்.
டார்ஜிலிங்கின் சுக்னாவில் உள்ள 33 கார்ப்ஸின் தலைமையகத்திலிருந்து வீடியோ கான்பரன்சிங் மூலம் மாற்று கேங்டோக் – நாதுலா இடையே சீரமைக்கப்பட்ட சாலையையும் அவர் திறந்து வைத்தார்.
விழாவுக்குப் பின்னர் பேசிய ராஜ்நாத் சிங், "இந்திய -சீன எல்லைப் பதற்றம் முடிவுக்கு வந்து சமாதானம் பாதுகாக்கப்பட வேண்டும் என்று இந்தியா விரும்புகிறது.
அதே சமயம், நம் நிலத்தின் ஒரு அங்குலம் கூட எதிரிகள் எடுக்க நம் இராணுவம் அனுமதிக்காது என்று நான் நம்புகிறேன்" எனக் கூறினார்.
கடந்த ஆண்டு, ராஜ்நாத் சிங் ஆயுத பூஜைக்காக பிரான்ஸ் சென்றார். அங்கிருந்து இந்தியாவின் முதல் ரஃபேல் போர் விமானத்தை பெற்றுக்கொண்டார். அந்த விமானத்துக்கு சந்தனம் குங்குமம் இட்டு, தேங்காய் வெற்றிலைப் பாக்கு வைத்து படைத்து , கற்பூர ஆராதனை காட்டி ஆயுத பூஜை கொண்டாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.