சீனர்களை விரட்டியடித்து சிவனின் கயிலாய மலையை வசப்படுத்திய நம் இராணுவத்தினர்.!

சீனர்களை விரட்டியடித்து சிவனின் கயிலாய மலையை வசப்படுத்திய நம் இராணுவத்தினர்.!

Update: 2020-10-29 09:05 GMT

நம் நாட்டின் இமய மலைத்தொடர்களில் இருக்கும் கயிலாய மலையை அதிசயங்கள் நிறைந்த மலை எனக் கூறுவர். கிட்டத்தட்ட 22 ஆயிரம் அடிவரை உள்ள உலகின் மிக உயர்ந்த சிகரங்கள் இங்குள்ளதாகக் கூறப்படுகிறது. உலகைக் காக்கும் கடவுளான "சிவபெருமான்" மற்றும் எண்ணற்ற சித்த புருஷர்கள் வாழும் இடமாக இந்துக்கள் இந்த கயிலாய மலையை கருதுகிறார்கள். சிவன் ஆலயம் அமைந்துள்ள இந்த இடம் கடல் மட்டத்தில் இருந்து 6,638 மீட்டர் உயரத்தில் அமைந்து இருக்கிறது.

இந்த கயிலை மலை எனப்படும் கயிலாய மலைக்கு சென்று சிவனை வழிபட இந்தியாவில் இருந்து ஆண்டு தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சென்று வருவது ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இருந்து வரும் வழக்கமாகும். சென்ற 1959 ஆம் ஆண்டு வரை இந்தியர்கள் நேபாளம், திபெத் வழியாக தங்கு தடை இன்றி இந்த மலைக்கு சுதந்திரமாக சென்றனர். ஆனால் சீனா 1959 ஆம் ஆண்டு திபெத்தை ஆக்கிரமித்தது. அதன் பிறகு இந்தியா - சீனா இடையே போர் ஏற்பட்டது. அப்போது ஹிந்துக்கள் திபெத் வழியாக மானசரோவர் செல்வதற்கு சீனா தடை விதித்தது. மேலும் மானசரோவர் செல்லும் இந்தியர்கள் விசா வாங்கிச் செல்ல வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

இதனால் இந்தியாவில் இருந்து செல்லும் யாத்ரீகர்களுக்கு அங்கு செல்வதில் சிரமங்கள் ஏற்பட்டது. சீனாவிடம் விசா வாங்கி சென்றாலும், கைலாஷ்-மானசரோவருக்கு பயணம் மேற்கொள்ள பயன்படுத்தப்படும் சிக்கிம், நேபாளம் வழித்தடங்களில் 2 முதல் 3 வாரங்கள் வரை பயணம் மேற்கொள்ள வேண்டும். லிபுலேக் வழித்தடமானது 90 கி.மீ அதிக உயரம் கொண்ட மலை ஏறும் பயணம் என்பதால் வயதான பக்தர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வந்தனர்.

இந் நிலையில் 2014 ஆம் ஆண்டு பிரதமராக நரேந்திரமோடி பதவி ஏற்றுக் கொண்ட பின் அவரது அரசு சீனாவின் தலையீடு இல்லாமல் அதாவது திபெத் வழியாக செல்லாமல் கயிலாய மலைக்கு சுலபமாக செல்வதற்கான மாற்று வழிகள் குறித்து ஆராய்ந்தது. இந்நிலையில் 2020 மே மாதத்தில், கைலாஷ்-மானசரோவர் யாத்திரை நேரத்தைக் குறைக்கும் 80 கி.மீ நீளம் கொண்ட சாலையை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் துவங்கி வைத்தார்.

அப்போது அவர் கூறுகையில் " இனி மானசரோவர் செல்லும் பக்தர்கள் இந்திய பாதையில் 84 சதவீதமும், வெறும் 16 கி.மீ தூரம் மட்டுமே சீன நிலப்பரப்பில் மேற்கொள்ள வேண்டி இருக்கும். இந்த சாலையால் யாத்திரை ஒரு வாரத்திலேயே முடிவடைந்து விடும் " அவர் தெரிவித்து இருந்தார். இந்நிலையில் சீனநிலப்பரப்பில் 16 கி.மீ தூரம் என்றாலும் அந்த இடத்தை கடக்க சீனாவின் அனுமதி தேவைப்பட்டது. இந்நிலையில் சமீபத்தில் சென்ற ஜூன் மாதம் ஏற்பட்ட மோதலில் சீனா அனுமதி மறுத்தது. கைலாஷ் மானசரோவருக்குமான பாதையையும் மூடி விட்டது.

இந்நிலையில் ஹிந்து யாத்ரீகர்களுக்கு தடை விதித்து வந்த சீனாவுக்கு அதிர்ச்சி வைத்தியம் தரும் வகையில் சென்ற ஆகஸ்ட் மாதம் 29- ந்தேதி மற்றும் 30- ந்தேதிகளில் கைலாஷ் மலைத்தொடரின் முக்கிய பகுதியை இந்திய இராணுவம் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட்டது.

சென்ற ஆகஸ்ட் மாதம் 29- ந்தேதி இரவு பாங்காங்சோ ஏரியின் தென் முனையில் தாங்குங் சிகரத்தில் ஊடுருவ முயன்ற சீன வீரர்களை பின் வாங்கச்செய்த இந்திய வீரர்கள் 'ஹரஹரா மஹாதேவா' என்று முழக்கமிட்டபடியே,வியூக முக்கியத்துவம் வாய்ந்த 6 மலை சிகரங்களை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. இதன் மூலம் 16 கி.மீ தூரம் சீன எல்லை நமது கட்டுப் பாட்டுக்குள் வந்துவிட்டது. அங்கு ஏராளமான இந்திய வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். டாங்குகள், பீரங்கிகள், ராக்கெட் லாஞ்சர்கள், கண்காணிப்பு ட்ரோன்கள் என இந்தியா குவித்து வருகிறது. இந்நிலையில் ஒருபோதும் எங்கள் பாரம்பரிய யாத்ரிக ஸ்தலத்தை விட முடியாது என உறுதியாக கூறி வருகிறது இந்தியா.

மேலும் இந்தியா நம் வயதான யாத்ரீகர்களும் சிரமமில்லாமல் பாதுகாப்பாக சென்று வர ஒரு இடத்தில் மலையை குடைந்து இடையில் மிகச்சிறந்த சாலையை அளித்துள்ளது. அங்கு இப்போது சீனாவும் படைகளை குவித்து வைத்துள்ளது. என்றாலும் செய்வதறியாது சீனா திகைத்து உள்ளதாம்.

பேச்சு வார்த்தையில் அந்த இடத்தை விட்டு இந்தியா காலி செய்ய வேண்டும் என சீனா வற்புறுத்திவருகிறது. ஆனால் இந்தியா சுதந்திர திபெத்தை நீங்கள் பாரம்பரிய இடம் எனக் கூறி ஆக்கிரமித்தீர்கள். அதேபோல மானசரோவர் எங்களுக்கு பாரம்பரிய யாத்ரிக ஸ்தலம் மட்டுமல்ல எண்கள் மக்கள் வணங்கும் சிவன் உலவும் இடம் எனக் கூறி இனி ஒருபோதும் அங்கிருந்து பின்வாங்க முடியாது என மறுத்து வருவதாக கூறப்படுகிறது.

ஒரு காலக் கட்டத்தில் பிரதமர் மோடி அவர்கள் சன்னியாசியாய் சுற்றிய போது இந்த சிவனுக்கு சொந்தமான இந்த வெள்ளிப்பனிமலைக்கு வந்து இதன் அழகைக் கண்டு ஆனந்த மயமானாராம். அப்போதே இந்த நம் பூர்வீக இடத்தை சீனாவிடமிருந்து கைப்பற்றும் நாள் எந்நாளோ என ஏங்கினாராம். இப்போது எல்லை மோதலை ஒரு வாய்ப்பாக அவர் பயன்படுத்திகொண்டதாக கூறப்படுகிறது.

https://www.polimernews.com/amp/news-article.php?id=125728&cid=20

Similar News