தமிழகத்தில் முதல் முறையாக கொரோனா நோயாளிகளுக்கு நூலக வசதி.!

தமிழகத்தில் முதல் முறையாக கொரோனா நோயாளிகளுக்கு நூலக வசதி.!

Update: 2020-10-30 16:26 GMT

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களுக்கு, பாதிப்பு அதிகம் இருந்தால் அரசு மருத்துவமனைகளிலும், குறைவான பாதிப்புடையவர்களுக்கு கொரோனா சிறப்பு மையங்களிலும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் அரசு மருத்துவமனைகள், கொரோனா மையங்களில் அனுமதிக்கப்படும்.

நோயாளிகளை உற்சாகப்படுத்தி, மருத்துவமனை நிர்வாகங்கள் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் தற்போது கிண்டி கிங் கொரோனா மருத்துவமனையில் நூலகம் நேற்று திறக்கப்பட்டு நோயாளிகளின் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. இது நோயாளிகளுக்கு இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஏனென்றால் அவர்கள் நாள்முழுவதும் மருத்துவமனையில் இருக்க வேண்டிய ஒரு சூழ்நிலை உள்ளது. எனவே அவர்கள் தங்களுடைய பொழுதைக் கழிப்பதற்காக இந்த நூலகம் மிகவும் உதவுவதாக கூறுகின்றனர்.




மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள இந்த நூலகம் காலை 8 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் என ஒரு நாளைக்கு ஆறுமணி நேரம் திறந்து வைக்கப்படுகிறது. இந்த நூலகம் 16 பெயர்கள் சமூக இடைவெளியுடன் உட்கார்ந்து படிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு பொது மருத்துவம், வரலாறு, மன ஆரோக்கியம், யோகா, கல்வி குழுமம் உள்ளிட்ட தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் 1,700 புத்தக காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. 




இதுகுறித்து மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர் நாராயணசாமி கூறுகையில், "மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் தனிமையில் இருப்பதால், அவர்களுக்கு மன நலம் தொடர்பான பிரச்சினை ஏற்படக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறோம். இதனால் அவர்களுக்கு சிகிச்சையோடு யோகா உள்ளிட்ட பல்வேறு உற்சாகப்படுத்தும் வேலைகள் அளிக்கப்படுகின்றன. இந்த நிலையில் தமிழகத்தில் முதன்முறையாக கிண்டி கிங் கொரோனா மருத்துவமனையில் நோயாளிகளின் நூலக வசதி தற்போது ஏற்பட்டுள்ளது" என்று கூறினார்.

Similar News