எதிரி கப்பல்களை இலக்கு வைத்து சுக்கு நூறாக்கும் புதிய நாசகாரி ஏவுகணை: இந்திய கடற்படை சோதனை.!
எதிரி கப்பல்களை இலக்கு வைத்து சுக்கு நூறாக்கும் புதிய நாசகாரி ஏவுகணை: இந்திய கடற்படை சோதனை.!
கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே கடந்த 6 மாதங்களாக எல்லைப்பிரச்சினை காரணமாக மோதல் சூழல் நிலவுகிறது. பேச்சுவர்த்தை பயனளிக்காத நிலையில் எந்த நேரத்திலும் எத்தகைய சூழலையும் எதிர்கொள்ளும் விதத்தில் இந்தியா தயாராகி வருகிறது.
சீனா எல்லைப் பகுதியில் தனது துருப்புகளை அதிகப்படுத்தி வருகிறது. இந்தியாவும் இதுவரை 54 ஆயிரம் துருப்புகளை கூடுதலாக எல்லைப் பகுதிக்கு அனுப்பி வைத்துள்ளது. சீனா ஏராளமான ஏவுகணைகளை தயார் செய்து தனது தென் கிழக்கு மாகாண கிடங்குகளில் நிரப்பி வருவதாக செய்திகள் வந்துள்ளன.
இந்நிலையில் இந்தியா எப்போதும் இல்லாத வகையில் கடந்த 2 மாதங்களில் மட்டும் 13 ரக நவீன ஏவுகணைகளை வானில் இருந்தும், தரையில் இருந்தும், கப்பலில் இருந்தும் செலுத்தி சோதனை செய்து வருகிறது. ஆயிரக்கணக்கான ஏவுகணைகளை தயாரித்து தயார் நிலையில் வைத்துள்ளது. சென்ற வாரம் அரபிக்கடலில் ஐ.என்.எஸ். பிரபல் தாக்குதல் கப்பலில் இருந்து நாசகாரி ஏவுகணை ஓன்று செலுத்தப்பட்டது. எதிரி கப்பல்களை இலக்கு வைத்து சுக்கு நூறாக்கும் இந்த தாக்குதல் சோதனை வெற்றிகரமாக நடைபெற்றதாக அதிகாரிகள் கூறினர்.
இந்நிலையில் இந்திய கப்பற்படை வங்கக் கடலில் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கடற்படையின் தாக்குதல் கப்பலான ஐ.என்.எஸ். கோராவில் இருந்தும் கப்பல்களை தாக்கி அழிக்க வல்ல நவீன ஏவுகணையானது வெள்ளிக் கிழமை செலுத்தப்பட்டு பரிசோதிக்கப்பட்டது.
இது தொடர்பாக இந்திய கடற்படை அதிகாரிகள் கூறுகையில் " ஐ.என்.எஸ். கோராவில் இருந்து செலுத்தப்பட்ட ஏவுகணை இலக்கை துல்லியமாக தாக்கி அழித்தது. அந்த ஏவுகணையால் தாக்கப்பட்ட கப்பலானது மிகுந்த சேதத்துக்கு உள்ளாகி தீப்பிடித்தது. ஏவுகணை அதிக பட்ச தொலைவுக்கு செலுத்தி பரிசோதிக்கப்பட்டது " என்றும் அவர்கள் கூறினர்.