தேசிய ஒற்றுமை தின நிகழ்ச்சியில் பாரதி கவிதையை மேற்கோள்காட்டி பிரதமர் பேச்சு.!
தேசிய ஒற்றுமை தின நிகழ்ச்சியில் பாரதி கவிதையை மேற்கோள்காட்டி பிரதமர் பேச்சு.!
இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சர் திரு சார்தார் வல்லபாய் படேல் அவர்களின் பிறந்த தினமான அக்டோபர் 31 தேதியில் வருடாவருடம் தேசிய ஒற்றுமை தினம் கொண்டாடப்படுகிறது. இந்த வருடம் பிரதமர் மோடி, குஜராத் மாநிலத்தின் கெவாடியா கிராமத்தில் உள்ள ஒற்றுமை சிலைக்கு மரியாதை செலுத்தினார்.
நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:-
இன்று சபர்மதி ஆற்றங்கரையில் இருந்து கெவாடியா வரை ஒரு கடல் விமான சேவை இன்று தொடங்க உள்ளது. இது இந்த பகுதியில் சுற்றுலாவை மேம்படுத்த உதவும்இன்று காஷ்மீர் ஒரு புதிய வளர்ச்சிப் பாதையில் நகர்ந்துள்ளது. வடகிழக்கில் அமைதியை மீட்டெடுப்பதாக இருக்கட்டும் அல்லது அங்கு வளர்ச்சிக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளாக இருக்கட்டும் எதுவாக இருந்தாலும், இன்று நாடு ஒற்றுமையின் புதிய பரிமாணங்களை எட்டுகிறது.
தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் 130 கோடி இந்தியர்கள் இணைந்து களப்பணியாளர்களை கவுரவித்தனர். இந்த நேரத்தில் நாடு முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு தனது கூட்டு திறனை நிரூபித்துள்ளது. இவ்வாறு அவர் பேசிய அவர், பாரதியாரின் "மன்னும் இமயமலை எங்கள் மலையே" என்னும் பாடல் வரிகளை மேற்கோள் காட்டி பேசினார்.