நிகிதா கொலை வழக்கு: வலைத்தள தொடர் 'மிர்சாபூர்' மூலம் ஈர்க்கப்பட்டு கொலை செய்ததாக தஸீப் வாக்குமூலம்.!
நிகிதா கொலை வழக்கு: வலைத்தள தொடர் 'மிர்சாபூர்' மூலம் ஈர்க்கப்பட்டு கொலை செய்ததாக தஸீப் வாக்குமூலம்.!
இந்த வாரம் தொடக்கத்தில் ஹரியானா மாநிலத்தில் மேவாட் பகுதியில் நடந்த கொடூர கொலை சம்பவம் தொடர்பாகக் குற்றவாளி தஸீப் திடுக்கிடும் வாக்குமூலத்தை அளித்துள்ளான். அவன் வலைத் தளத்தில் வரும் தொடரான 'மிர்சாபூர்' மூலம் ஈர்க்கப்பட்டு அதில் முன்னணி நடிகர் அவரது காதலை மறுத்த பெண்ணை கொலை செய்வது மூலம் ஈர்க்கப்பட்டு நிகிதா தோமரை கொலை செய்ததாகக் கூறியுள்ளான்.
விசாரணையின் போது 'மிர்சாபூர்' தொடரில் வரும் முன்னா கதாபாத்திரம் மூலம் ஈர்க்கப்பட்டதாக காவல்துறையிடம் தஸீப் வாக்குமூலம் அளித்துள்ளான். வலை தொடரில் வரும் முன்னா காதலை மறுத்த பிறகு அந்த பெண்ணை சுட்டு கொலை செய்வது போல் இவனும் நிகிதாவை கொலை செய்ய எண்ணியதாகத் தெரிவித்துள்ளான். நிகிதா தன் காதலை மறுத்த போது என்ன செய்வது என்று தெரியாமல் இருந்தபோது இந்த தொடரைப் பார்த்த பின்பு கொலை செய்ய முடிவு செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளான்.
விசாரணையின் போது மேலும் ஒரு முக்கியமான உண்மையும் வெளிவந்துள்ளது. நிகிதாவை கொலை செய்யக் குற்றவாளி தஸீப்பின் தாய் மாமன் நாட்டுத் துப்பாக்கி வழங்கியதாகவும் தெரியவந்துள்ளது. மேலும் மாமன் இஸ்லாமுதின் 2018 இல் காவல் அதிகாரியைக் கடத்தியதற்காக பத்து ஆண்டு சிறைத் தண்டனை பெற்றுள்ளார், மேலும் தற்போது சிறையில் இருந்தே துப்பாக்கிக்கு ஏற்பாடு செய்துள்ளார்.
தஸீப் அவரது காதலை ஏற்க மறுத்ததற்காகவும் முஸ்லீம் மதத்திற்கு மாற மறுத்ததற்காகவும் 21 வயது மாணவி நிகிதா தோமரை கொடூரமாகக் கொலை செய்துள்ளான். நிகிதாவை அகர்வால் கல்லூரிக்கு முன்பு வைத்து காலையில் சுட்டுக் கொன்றுள்ளான். இந்த கொடூர கொலை சம்பவம் அனைத்தும் கேமராவில் பதிவாகியுள்ளது அது தற்போது வைரலாகி வருகின்றது. தஸீப் மற்றும் அவரது கூட்டாளி ரேஹான் இருவரையும் காவல்துறை கைது செய்துள்ளது.