கொரோனா சூழலிலும் ஜி.எஸ்.டி வசூல் சென்ற ஆண்டு அக்டோபரை தாண்டி அபாரம் - நிர்மலா சீத்தாராமன் பெருமிதம்.!
கொரோனா சூழலிலும் ஜி.எஸ்.டி வசூல் சென்ற ஆண்டு அக்டோபரை தாண்டி அபாரம் - நிர்மலா சீத்தாராமன் பெருமிதம்.!
கொரோனா பொது முடக்கம் காரணமாக தொழில்கள் மீதான சரக்கு மற்றும் சேவை வரி வசூல் பாதித்திருந்த நிலையில் பொது முடக்க கட்டுப்பாடுகள் படிப்படியாக கடந்த 3 மாதங்களாக குறைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்ற செப்டம்பர் மாத ஜி.எஸ்.டி வசூல் ரூபாய். 95 ஆயிரத்து 480 கோடி வசூல் ஆனது. இதை அடுத்து நாடு மெல்ல, மெல்ல சுமூக நிலைக்கு திருப்பி வருவதாகவும், மத்திய அரசு எடுத்த பொருளாதார மீட்பு நடவடிக்கைகள் பலனளித்து வருவதாகவும் மத்திய அரசு தெரிவித்தது.
இது எதிர்கால பொருளாதார வளர்ச்சிக்கான நல்ல அறிகுறி என்றும் சரியான நேரத்தில் எடுத்த சரியான நடவடிக்கைளுக்கு கிடைக்கும் ஊக்கம் என்றும் நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கூறி இருந்தார். இந்த நிலையில் அக்டோபர் மாத ஜி.எஸ்.டி வசூல் நேற்றைய வரை 1 இலட்சத்து 05 ஆயிரத்து155 கோடி வசூல் ஆனதாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சென்ற ஆண்டு இதே அக்டோபர் மாதத்தில் 95,380 கோடியே வசூலானது. ஆனால் மோசமான கொரோனா சூழ்நிலையை நம் நாடு சந்தித்தும் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் 1 இலட்சத்து 05 ஆயிரத்து155 கோடி வசூல் ஆனது நம் மீட்பு முயற்சிகளுக்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகும் என நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் குறிப்பிட்டுள்ளார்.
இதில் CGST வசூல் 19,193 கோடி, SGST வசூல் ரூ.25,411, IGST வசூல் ரூ. 52,540 (ரூ. 23, 375 கோடி பொருட்கள் இறக்குமதி வசூல் மற்றும் செஸ் ரூ. 8,011 கோடி (பொருட்கள் இறக்குமதி செய்ய சேகரிக்கப்பட்ட ரூ. 932 கோடி உட்பட) என நித்யமைச்சகம் தெரிவித்துள்ளது.