உ.பி: பெண்களின் மரியாதையை உறுதி செய்ய மாணவர்களுக்கு புதிய பாடத்திட்டம்.!
உ.பி: பெண்களின் மரியாதையை உறுதி செய்ய மாணவர்களுக்கு புதிய பாடத்திட்டம்.!
உத்தரப் பிரதேச மாநிலத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் மற்றும் அவர்களை மேம்படுத்தவும் கொண்டுவரப்பட்ட 'மிஷன் சக்தி' திட்டத்தின் ஒரு பகுதியாக, உத்தரப் பிரதேச மாநிலத்தில் இருக்கும் மாணவர்களுக்குப் பெண்களை மதிக்கக் கற்றுத்தருவதன் ஒரு நோக்கமாக அடிப்படை மற்றும் மேல்நிலை கல்வி பாடத்திட்டங்களில் முன்னுதாரண மாற்றத்தைக் கொண்டுவர யோகி அரசு முடிவு செய்துள்ளது.
பெண்களைத் தன்னம்பிக்கையுடனும், தைரியத்துடனும் மாற்றவும் மற்றும் அவர்களது பாதுகாப்பு மற்றும் மரியாதையை உறுதி செய்யவும் மாநில அரசு செயல்பட்டு வருகின்றது. இந்த திட்டத்தின் முதல் பாதியில் அக்டோபர் 25 வரை நடத்தப்பெற்ற பிரச்சாரத்தில், உயர் கல்வித்துறை இருக்கும் 6,349 கல்லூரியைச் சேர்ந்த 5,57,883 மாணவர்களுக்கு வெப்மினார் மூலம் விழிப்புணர்வு நிகழ்ச்சியையும் மற்றும் போட்டிகளையும் நடத்தினர்.
இந்த திட்டத்தின் இரண்டாம் கட்டத்தில் ஒரு சிறிய திட்டம் கொண்டுவரப்படவுள்ளது. அதில் இதற்கென ஒரு போர்டல் தொடங்கப்பட்டு அதில் இந்த திட்டங்கள் சார்ந்த தகவல்கள் பதிவிடப்படும். பெண்களுக்கு மற்றும் சிறுமிகளுக்கு வழங்கப்படும் திட்டங்கள் சார்ந்த தகவல்களை இந்த போர்டல் வழங்கும். மேலும் தற்போது கொண்டுவரப்பட்டுள்ள முன்னுதாரண மாற்றங்களைப் பெற்றோர்கள் வரவேற்றுள்ளதாகவும் உயர்கல்வி துறை தெரிவித்துள்ளது.
தற்போது மாணவர்களின் சிந்தனைகளை மாற்ற யோகி அரசு முக்கிய மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளது என்று சமூக ஆர்வலர் வர்ஷா வர்மா தெரிவித்துள்ளார். கடவுள் 'சக்தியை' வழிபடும் இந்தியக் கலாச்சாரத்தில் பெண்களுக்கு மரியாதை வழங்கப்படும் என்று கூறினார். இந்தியாவின் சிறந்த பெண்களில் வரலாறுகள், வெற்றிக் கதைகள், மற்றும் பாதுகாப்பு தொடர்பான பிரச்சனைகள் குறித்தும் பாடத்திட்டம் தெரிவிக்கும்.
கடந்த ஒன்பது நாட்களாக உத்தரப் பிரதேசத்தில் கல்லூரிகளில் மிஷன் சக்தி திட்டத்தின் கீழ் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 6,349 கல்லூரிகளில் நிகழ்ச்சிகள் நடைபெற்றன, அதில் 5,57,383 மாணவ மாணவிகள் மற்றும் 1,46,177 ஆசிரியர்கள் பெண்களின் பாதுகாப்பு மற்றும் மரியாதையை உறுதிசெய்ய உறுதி ஏற்றுக்கொண்டனர்.
மேலும் 3,007 கல்லூரியைச் சேர்ந்த 4,46,355 மாணவிகளுக்கு இணையம் மற்றும் நேரடியாகத் தற்காப்பு பயிற்சிகள் வழங்கப்பட்டன. இதுதவிர, 2,57,407 மாணவிகள் கட்டுரை, சுவரொட்டி, ஸ்லோகன் மற்றும் வினாடி வினா போட்டிகளில் பங்கேற்றனர். மேலும் 1,783 வல்லுநர்கள் 2,986 கல்லூரியைச் சேர்ந்த 3,13,996 மாணவர்களுக்கு மனித உரிமை மீறல்கள், POCSO சட்டம், பெண்களின் உதவி எண்கள் குறித்த தகவலை வெப்மினார் மூலம் தகவல் கொடுத்தனர்.