பாபர் மசூதி இடிப்பு வழக்கு: தீர்ப்பளித்த முன்னாள் நீதிபதியின் பாதுகாப்பை நீடிக்க மறுத்த உச்ச நீதிமன்றம்.!
பாபர் மசூதி இடிப்பு வழக்கு: தீர்ப்பளித்த முன்னாள் நீதிபதியின் பாதுகாப்பை நீடிக்க மறுத்த உச்ச நீதிமன்றம்.!
நீண்ட நாட்களாக இருந்த வந்த பாபர் மசூதி இடித்தது தொடர்பான வழக்கிற்குத் தீர்ப்பு வழங்கிய முன்னாள் சிறப்பு நீதிபதி SK யாதவின் சிறப்பு பாதுகாப்பு நீடிக்கக் கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் இன்று மறுத்து விட்டது. பாதுகாப்பு நீடிக்கக் கோரிய முன்னாள் சிறப்பு நீதிபதியின் மனுவை RF நாரிமன், நவீன் சின்ஹா மற்றும் கிருஷ்ணா முராரி நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரணை செய்தது.
பாதுகாப்பு தருவது சரியாக இருக்காது என்று கூறி அவரது கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்தது. பாபர் மசூதி இடித்ததது தொடர்பான வழக்கில் அதனின் முக்கிய தன்மையை கருத்தில் கொண்டு முன்னாள் நீதிபதியின் தனிப்பட்ட பாதுகாப்பு கோரிக்கையை நீதிமன்றம் விசாரணையை மேற்கொண்டது.
பாபர் மசூதி இடிப்பு தொடர்பான வழக்கிற்கு முன்னாள் CBI நீதிமன்றத்தின் சிறப்பு நீதிபதி SK யாதவ் அவரது பதவிக் காலத்தின் இறுதி நாளில் தீர்ப்பளித்தார். மேலும் தனது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாகக் கூறி உச்ச நீதிமன்றத்துக்குக் கடிதம் ஒன்றை எழுதினார். ஆனால் அவரது பாதுகாப்பை அதிகரிப்பு அவசியமற்றது என்று கூறி நீதிமன்றம் கோரிக்கையை நிராகரித்தது.
பாபர் மசூதி இடிப்பு தொடர்பான வழக்கிற்குச் செப்டம்பர் 30 இல் CBI சிறப்பு நீதிமன்றம், பா.ஜ.க தலைவர்கள் LK அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, முன்னாள் அமைச்சர்கள் உமா பாரதி மற்றும் கல்யாண் சிங் உட்பட 32 குற்றவாளிகளை விடுவித்து நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. மேலும் சர்ச்சைக்குரிய கட்டமைப்பை இடித்தது எதிர்ச்சியாக நடந்தது மற்றும் திட்டமிடப்பட்ட செயல் இல்லை என்றும் கூறியது.