ராஜ்யசபாவில் காங்கிரஸ் உட்பட எதிர்கட்சிகள் ராஜ்ஜியம் ஓய்ந்தது - உ.பி.வெற்றி மூலம் வீறு கொண்டு எழுந்த பாஜக.!

ராஜ்யசபாவில் காங்கிரஸ் உட்பட எதிர்கட்சிகள் ராஜ்ஜியம் ஓய்ந்தது - உ.பி.வெற்றி மூலம் வீறு கொண்டு எழுந்த பாஜக.!

Update: 2020-11-03 16:58 GMT

உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட் மாநிலங்களில் இருந்து 10 எம்.பி.க்கள் பாஜக சார்பில் மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து, பாஜகவின் பலம் 92 ஆக அதிகரித்துள்ளது. ஒட்டுமொத்தமாக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பலம் 104 ஆக உயர்ந்துள்ளது.

இத்தனை ஆண்டுகளாக எதிர்க்கட்சிகளின் ஆதிக்கம் அதிகம் இருந்து வந்த மாநிலங்களவையில் இனிமேல் பாஜக கூட்டணியின் அதிகாரமே மேலோங்கியிருக்கும். காங்கிரஸ் கட்சியின் பலம் 38 ஆக மாநிலங்களவையில் குறைந்துள்ளது. இதில் மாநிலங்களவைக்குத் தேர்வாகிய 10 பாஜக எம்.பி.க்களில் மத்திய அமைச்சர் ஹர்திப்சிங் புரி உள்பட 6 பேர் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியிலிருந்து 5 பேர் தேர்வாகியுள்ளனர். 242 உறுப்பினர்கள் கொண்ட மாநிலங்களவையில் எந்த மசோதாவையும் நிறைவேற்ற 121 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. இதில் பாஜகவுக்கு தற்போது 92 உறுப்பினர்களும், கூட்டணியுடன் சேர்க்கும்போது 104 ஆகவும் உயர்ந்துள்ளது. பாஜகவின் என்டிஏ கூட்டணியில் ராம்தாஸ் அத்வாலேவின் ஆபிஐ கட்சி, அசாம் கண பரிஷத், மிசோ தேசிய முன்னணி, தேசிய மக்கள் கட்சி, நாகா மக்கள் முன்னணி, பாட்டாளி மக்கள் கட்சி, போடோலாந்து மக்கள் முன்னணி ஆகியவற்றிடம் தலா ஒரு இடம் உள்ளது.

இதனால் பாஜகவின் என்டிஏ கூட்டணியின் பலம் 104 ஆகவும், நியமன உறுப்பினர்கள் 4 பேர் பாஜகவுக்கு ஆதரவு அளிப்பதால், 108 ஆகவும் அதிகரித்துள்ளது. இவை தவிர பாஜக கூட்டணியில் சேராத ஆனால், நட்பு பாராட்டும், தேவைக்கு ஏற்ப ஆதரவு தரும் அஇஅதிமுக வின் 9 எம்.பி.க்கள், பிஜூ ஜனதா தளம 9 எம்பிக்கள், தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி 7 எம்.பி.க்கள், ஒய்எஸ்ஆர்பி கட்சி 6 எம்.பி.க்கள் ஆகியோர் பாஜகவுக்கு ஆதரவு அளிக்கும் நிலையில் மாநிலங்களவையில் பாஜகவின் பலம் 139 ஆக அதிகரித்துள்ளது. இதனால் பாஜகவுக்கு அசுர பலம் கிடைத்துள்ளதாக பத்திரிகைகள் வருணித்துள்ளன.

Similar News