குடும்ப மற்றும் வாக்கு வங்கி அரசியலை முன்னெடுத்தது காங்கிரஸ் மக்களை பிளவுபடுத்துகிறது - பிரதமர் மோடி
குடும்ப அரசியல் மற்றும் ஓட்டு வங்கிக்கான அரசியலை முன்னெடுத்து மக்களை காங்கிரஸ் கட்சி பிளவுபடுத்துவதாக பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்துள்ளார்.;
குடும்ப அரசியல் மற்றும் ஓட்டு வங்கிக்கான அரசியலை முன்னெடுத்து மக்களை காங்கிரஸ் கட்சி பிளவுபடுத்துவதாக பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்துள்ளார்.
குஜராத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி காங்கிரஸ் மாடல் ஆட்சி குஜராத்தை மட்டும் இல்லை நாட்டையே பாதிப்புக்குள்ளாக்கியதால் நாம் தேசத்தை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்ல கடுமையாக உழைக்க வேண்டியுள்ளதாக கூறினார்.
மேலும் தொலைநோக்குப் பார்வை இருந்தால் மட்டுமே நாட்டை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்ல முடியும் எனவும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.