'வளர்ச்சி என்பது பா.ஜ.க'வின் முன்னுரிமை' - குஜராத்தில் பிரதமர் மோடி
'வளர்ச்சிக்கு பா.ஜ.க முன்னுரிமை அளிப்பதால் அரசியல் கட்சிகளுக்கு அதுகுறித்து பேச வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது' என பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.;
'வளர்ச்சிக்கு பா.ஜ.க முன்னுரிமை அளிப்பதால் அரசியல் கட்சிகளுக்கு அதுகுறித்து பேச வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது' என பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
குஜராத்தின் போதாத் நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி கூறியதாவது, பா.ஜ.க அரசு சுகாதாரத் துறையில் பெரிய மாற்றத்தை கொண்டு வந்ததாகவும், ஒவ்வொரு வீட்டிற்கும் குழாய் மூலம் குடிநீர் கிடைப்பது உறுதி செய்யப்பட்டதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
மேலும் பேசிய பிரதமர், 'அடுத்த 25 ஆண்டுகளில் நாட்டின் வளர்ச்சி துரிதப்படுத்தப்பட வேண்டும்' என தெரிவித்தார். முன்னதாக குஜராத்தில் பிரசித்தி பெற்ற சோமநாத் கோவில் பிரதமர் மோடி தரிசனம் செய்தார்.