அதிகரித்து வரும் பாகிஸ்தானின் எல்லை தாங்கிய ட்ரோன் ஊடுருவல்கள் - இரண்டு ஆண்டுகளில் 3 மடங்காக உயர்வு
பாகிஸ்தானில் இருந்து எல்லை தாண்டி நடக்கும் வரும் ட்ரான் ஊடுருவல்கள் அதிகரித்துள்ளதாக எல்லை பாதுகாப்பு படையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.;
பாகிஸ்தானில் இருந்து எல்லை தாண்டி நடக்கும் வரும் ட்ரான் ஊடுருவல்கள் அதிகரித்துள்ளதாக எல்லை பாதுகாப்பு படையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
புது டெல்லி ட்ரான் நடமாட்டம் குறித்து ஆய்வு செய்யும் தடவியல் ஆய்வு மற்றும் திறப்பு விழா நேற்று நடந்தது. இதில் எல்லை பாதுகாப்பு படை இயக்குனர் பங்கஜ்குமார் பேசினார். அப்போது அவர் கூறியதாவது, 'நமது அண்டை நாடாக பாகிஸ்தான் பகுதியிலிருந்து நமது எல்லை மீதான ட்ரான் ஊடுருவல்கள் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து உள்ளது.
கடந்த 2020 ஆம் ஆண்டில் 79 ட்ரோன்களும், 2021 ஆம் ஆண்டில் 109 ட்ரோன்களும் ஊடுருவ முயன்றன. தற்பொழுது இந்த எண்ணிக்கை இரண்டாம் மடங்காக அதிகரித்து 276 ட்ரோன்கள் ஊடுருவ முயற்சி செய்துள்ளன. இந்த ட்ரான்கள் பெருமளவில் பஞ்சாப் மாநில எல்லை வழியாக வருகின்றனர். இந்த சட்ட விரோத செயல்களில் ஈடுபவர் யார் என்பதையும் ட்ரான்கள் பயண பாதையும் துல்லியமாக கண்டுபிடிக்க தற்பொழுது அதிநவீன ஆய்வு வசதிகள் நம்மிடம் உள்ளதால் எல்லா முயற்சிகளையும் தொடர்ந்து முறியடித்து வருகிறோம் என கூறினார்.