குண்டுவெடிப்பு குற்றவாளி 'தாவூத் இப்ராகிமின்' சகோதரி வீட்டில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை!

Update: 2022-02-15 12:53 GMT

மும்பையில் கடந்த 1993ம் ஆண்டு தொடர் குண்டுவெடிப்பு நடைபெற்றது. இந்த வழக்கில் மிக முக்கிய குற்றவாளியான நிழல் உலக தாதா வெளிநாட்டிற்கு தப்பியோடிவிட்டார். இந்த வழக்கில் சட்ட விரோத பணிப்பரிவர்த்தனை குறித்து அமலாக்கத்துறையினர் வழக்குப்பதிவு செய்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், மும்பையில் இன்று காலை முதல் 10 இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சட்ட விரோதமாக சொத்துக் குவிப்பு மற்றும் ஹவாலா பரிவர்த்தனை தொடர்பாக அதிகாரிகள் கூறினர்.

இந்த சோதனையில் முக்கியமான குற்றவாளியான நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிமின் சகோதரி ஹசீனா பார்கரின் வீட்டிலும் அமலாக்கத்துறை அதிரடியான சோதனை மேற்கொண்டுள்ளது. இந்த வழக்கில் பல முக்கிய ஆவணங்கள் கிடைக்கப்பெற்றிருப்பதாக கூறப்படுகிறது. இதில் சில அரசியல் தலைவர்களுக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படும் நிலையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Source, Image Courtesy: Maalaimalar

Tags:    

Similar News