போலி சிம் கார்டு, தமிழ்நாடு முழுவதும் பயணம் - மங்களூரு குண்டு வெடிப்பு சம்பவத்தின் பகீர் தகவல்கள்

பெங்களூருவில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் கோவைக்கும் தொடர்பு இருப்பதாக கர்நாடக டி.ஜி.பி தகவல் தெரிவித்துள்ளார்.;

Update: 2022-11-21 02:05 GMT

பெங்களூருவில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் கோவைக்கும் தொடர்பு இருப்பதாக கர்நாடக டி.ஜி.பி தகவல் தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்தவர் கர்நாடக டி.ஜி.பி' இது குறித்து கூறியதாவது, 'சம்பவம் தொடர்பாக சந்தேகக்கப்படும் நபர் கர்நாடகாவை சேர்ந்தவர். கடந்த சில மாதங்களில் கோவை மற்றும் தமிழகத்தின் சில பகுதிகளுக்கு அவர் பயணித்ததாகவும் கூறினார்.

இதனிடையே அந்த குண்டு வெடிப்பில் ஈடுபட்ட நபர் கோவையில் போலியான விவரங்கள் வழங்கி சிம் கார்டு வாங்கியதாகவும் அவர் தமிழ்நாடு முழுவதும் பயணம் செய்ததை அவர் செல்போன் சிக்னல் காட்டுவதாகவும் மத்திய புலனாய்வு அமைப்புகள் தெரிவித்துள்ளன.


Source - Polimer News




Similar News