உத்திரப்பிரதேச மாநிலம் வாரணாசியில், ராஜா தலாப், சதர் ஆகிய தாலுகாக்களில் 195 மதரஸாக்கள் உள்ளன. அவற்றில் 23 மதரஸாக்கள் மாநில அரசு நிதி பெறுகின்றன.
அங்கீகாரம் பெற்ற 85 மதரஸாக்கள், அங்கீகாரம் பெறாமல் 87 மதரஸாக்கள் உள்ளன. 12 மதரஸாக்களுக்கு நிதி எங்கிருந்து வருகிறது என்ற தகவல் இல்லை. 20 மதரஸாக்களில் 15-க்கும் குறைவான மாணவர்களுடன் நிதியுதவி பெறவதற்காகவே நடத்துகின்றனர்.
மதரஸாவின் 50 சதவிகித மாணவ, மாணவிகள் அருகிலுள்ள பொதுக் கல்விக்கான பள்ளிகளிலும் பயில்கின்றனர். 10 மதரஸாக்களில் கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகள் கூட இல்லை.
பிரயாக்ராஜ் மாவட்டத்தில் 60 மதரஸாக்களுக்கு விதிகளை மீறி வெளிநாடுகளின் நிதி வருகிறது. மதரஸாக்கள் சார்பில் உருது மற்றும் ஆங்கில மொழி பத்திரிகைகள்நடத்தப்படுகின்றன. இந்த பத்திரிகைகள் ஐக்கிய அரபு நாடுகளில் நிதி வசூல் செய்ய பயன்படுத்தப்படுகின்றன.
நிதியை வசூலிக்க தரகர்களும் செயல்படுவதாகத் தெரிகிறது. இதையே தொழிலாகச் செய்து வரும் மவுலானாக்களுக்கு சுமார் 40% வரை கமிஷன் தொகையும் அளிக்கப்படுகிறது.
Input From: The News Glory