ஹிமாச்சல் பிரதேசத்தில் பொது சிவில் சட்டம் - புள்ளி வைத்த ஜே.பி.நட்டா
ஹிமாச்சல் பிரதேசத்தில் பா.ஜ.க வென்றால் மாநிலத்தில் பொது சிவில் சட்டம் கொண்டுவரப்படும் என இமாச்சல் பிரதேச மாநில தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை வெளியிட்டு பா.ஜ.க தேசிய தலைவர் நட்டா கூறியுள்ளார்.
ஹிமாச்சல் பிரதேசத்தில் பா.ஜ.க வென்றால் மாநிலத்தில் பொது சிவில் சட்டம் கொண்டுவரப்படும் என இமாச்சல் பிரதேச மாநில தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை வெளியிட்டு பா.ஜ.க தேசிய தலைவர் நட்டா கூறியுள்ளார்.
ஹிமாச்சல் பிரதேச மாநில தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை வெளியிட்டு பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பேசியதாவது, 'ஹிமாச்சல் பிரதேசத்தில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் 5 புதிய மருத்துவக் கல்லூரிகள் திறக்கப்படும். சுகாதார உட் கட்டமைப்பை கருத்தில் கொண்டு ஆரம்ப சுகாதாரத்தை மேலும் வலுப்படுத்துவோம்' என பேசினார்.
மேலும் அவர் பேசியதாவது ஹிமாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க வென்றால் மாநிலத்தில் பொது சிவில் சட்டம் கொண்டுவரப்படும், நிபுணர் குழு அமைக்கப்பட்டு அவர்கள் அளிக்கும் அறிக்கை அடிப்படையில் சிவில் சட்டம் அமலாகும் என பேசினார்.