அமலுக்கு வருகிறது பொது சிவில் சட்டம் - குஜராத் போட்டு வைத்த பிள்ளையார் சுழி!

Update: 2022-10-29 12:59 GMT

பொது சிவில் சட்டம் 

மதம், பாலினம் என அனைத்துக்கும் அப்பாற்பட்டு நாட்டு மக்கள் அனைவருக்கும் ஒரே மாதிரியான சிவில் சட்டத்தை அமல்படுத்த பாஜக முடிவு செய்தது. 2019 நாடாளுமன்றத் தேர்தலின்போது வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், பாஜக வெற்றி பெற்றால் நாடு முழுவதும் ஒரே மாதிரியான சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என அது வாக்குறுதி அளித்தது. 

இஸ்லாமிய அமைப்பு எதிர்ப்பு 

பொது சிவில் சட்டம் சிறுபான்மையினருக்கும் எதிரானது என அனைத்திந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் எதிர்ப்பு தெரிவித்தது. உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், பொது சிவில் சட்டம் கொண்டு வர நாடாளுமன்றத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட முடியாது என மத்திய அரசு கூறியது. 

அமல்படுத்த முடிவு 

பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தப் போவதாக உத்தராகண்ட் மற்றும் இமாச்சலப் பிரதேச அரசுகள் அறிவித்துள்ளன. குஜராத்திலும் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதற்கு அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. குஜராத்தில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க அமைச்சரவை ஒப்புதல் வழங்கி இருப்பதாக மாநில உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்கவி  தெரிவித்தார்.

Input From: HIndu

Similar News