ஹரியானா: பூசாரியைச் சரமாரியாக கிரிக்கெட் மட்டையால் தாக்கிய கொடூரம் - வைரலாகும் வீடியோ.!
ஹரியானா: பூசாரியைச் சரமாரியாக கிரிக்கெட் மட்டையால் தாக்கிய கொடூரம் - வைரலாகும் வீடியோ.!
தற்போது இணையத்தில் ஹரியானவை சேர்ந்த பூசாரி ஒருவரை கிரிக்கெட் மட்டையால் (பேட்) சரமாரியாகத் தாக்கும் வீடியோ வைரலாகி வருகின்றது. இந்த சம்பவம் ஹரியானா மாநிலத்தில் ஃபதேஹாபாத் மாவட்டத்தில் தாபி கலன் கிராமத்தில் நடைபெற்றுள்ளது.
A 26 years old Pujari was kidnapped n brutally beaten up by the casteist goons in a village of Haryana. D condition of pujari deteriorated while his family was taking him back 2 his native place in MP. More than 48 hours have been passed away yet police haven't arrested d accused pic.twitter.com/C6au0ZDnmS
— Shubham Sharma (@ShubhamSharm11) November 4, 2020
பாதிக்கப்பட்ட பூசாரி 26 வயதுடைய கைலாஷ் சர்மா என்று கண்டறியப்பட்டு, கடந்த இரண்டு வருடங்களாக அவரது உறவினர் ராம்ஜி உடன் பட்டு கலானில் வசித்து வருகிறார். கிராமத்தின் கோவிலில் ஆறு மாதங்களுக்கு முன்பு பூசாரியாக பணியமர்த்தப் பட்டுள்ளார்.
திங்களன்று அந்த கிராமத்தைச் சேர்ந்த சில இளைஞர்கள் பூசாரி மேல் சரமாரியாகத் தாக்குதல் நடத்தியுள்ளனர், மேலும் அதனை வீடியோ எடுத்து தற்போது அது இணையத்தில் வைரலாகி வருகின்றது. அந்த வீடியோவில் பூசாரியை ஒரு நபர் கிரிக்கெட் பேட்டால் சரமாரியாகத் தாக்கியதும் மற்றும் அதனால் பூசாரி கதறுவதையும் காண முடிந்தது.
சம்பவம் அறிந்து கிராம மக்கள் விரைந்து பூசாரியின் குடும்பத்திற்குத் தகவல் அளித்தனர். பின்னர் பூசாரியின் தந்தை அவரை மீண்டும் மத்தியப் பிரதேசத்தில் உள்ள அவரது கிராமத்துக்கு அழைத்துச் சென்றார். சம்பவம் குறித்த வீடியோவை கண்ட குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். அவர் மத்தியப் பிரதேசத்தில் ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நிலைமை மோசமடைந்ததால் சர்மா மதுரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.