சாமி என்னை மன்னிச்சிடு - கோயிலில் திருடிய பொருட்களை திருப்பி கொடுத்த திருடன்!
கோயிலில் திருட்டு
மத்திய பிரதேச மாநிலம் பாலகாட் நகரில் ஜெயின் கோயில் உள்ளது. இங்குள்ள விலைமதிக்க முடியாத பல பொருட்கள் திருடு போயின. போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். இருந்தும் குற்றவாளியை கண்டுபிடிக்க முடியவில்லை. திருட்டு நடந்து 4 நாட்களுக்கு பிறகு கோயிலுக்கு அருகில் உள்ள ஒரு குழியில் ஒரு பை இருப்பதை மக்கள் கண்டனர். அப்பையில் கோயிலில் திருடுபோன அனைத்து பொருட்களும் இருந்தது. அதனை கண்டு ஆச்சரியம் அடைந்தனர்.
மன்னிப்பு கடிதம்
கண்டெடுத்த பையில் ஒரு கடிதமும் இருந்தது. கோயிலில் திருடிய குற்றத்தை செய்த பிறகு நான் நிறைய கஷ்டப்பட்டேன். அதனால் இந்தப் பொருட்களை திருப்பிக் கொடுக்கிறேன். திருடியதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என எழுதப்பட்டு இருந்தது. அங்கு வந்த போலீஸாரும் திருடனின் கடிதத்தைப் பார்த்தனர். திருடப்பட்ட பொருட்களை கோயில் நிர்வாகிகளிடம் ஒப்படைத்தனர்.
திருடுபோன பொருட்களை மறுபடியும் கண்டதும் நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தோம். கடவுள் நம்முடன் இருக்கிறார் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
Input From: tribuneindia