இந்தியாவே எதிர்பார்க்கும் இமாச்சல பிரதேச தேர்தல் முடிவுகள் - 65.92 சதவிகித வாக்குப்பதிவு யாருக்கு சாதகம்?
பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட ஹிமாச்சலப் பிரதேச தேர்தலில் 65.92% வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட ஹிமாச்சலப் பிரதேச தேர்தலில் 65.92% வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
நேற்று காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்ற தேர்தலில் ஏராளமான ஆர்வமுடன் வந்து வாக்களித்தனர், மொத்தம் 412 வேட்பாளர்கள் போட்டியிட்ட நிலையில் 781 வாக்கு சாவடிகளை பலத்த பாதுகாப்புடன் தேர்தல் நடைபெற்றது.
சம்பா மாவட்டத்தைச் சேர்ந்த நரோதேவி என்கிற 106 வயது மூதாட்டி நேரில் வந்து தனது வாக்கை பதிவு செய்தார். தேர்தலில் 65.92 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனுடைய வாக்குப்பதிவு முடிந்த பின் சம்பா மாவட்டத்தின் பனி படர்ந்த மலையில் நடந்தே 15 கிலோமீட்டர் தூரத்திற்கு தேர்தல் பணியாளர்கள் வாக்கு பெட்டிகளை எடுத்துச் சென்றனர்.