நான் நடப்பது சர்தார் வல்லபாய் படேல் பாதை - குஜராத்தில் கர்ஜித்த பிரதமர் மோடி
சர்தார் பட்டேலின் பாதையில் நடப்பதால் தான் காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு காண முடிந்தது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
சர்தார் பட்டேலின் பாதையில் நடப்பதால் தான் காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு காண முடிந்தது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
குஜராத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடக்க இருக்கிறது அதனை முன்னிட்டு ஆனந்த் மாவட்டத்தில் உள்ள வல்லப் வித்யாநகரில் பா.ஜ.க'வின் பொது கூட்டம் நடைபெற்றது, அந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் கலந்து கொண்டு உரையாற்றினார்.
அப்பொழுது பேசி பிரதமர் கூறியதாவது, 'சர்தார் வல்லபாய் பட்டேல் அப்போது இந்தியாவின் சமஸ்தானங்களை இணைத்து பிரச்சனையை தீர்த்தார். ஆனால் 'ஒருவரால்' கூட காஷ்மீர் பிரச்சினையை தீர்க்க முடியவில்லை இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சர் சர்தார் படேலின் பாதையில் நடப்பதால் நீண்ட கால நிகழ்வில் வந்த காஷ்மீர் பிரச்சனைக்கு தீர்வு காண முடிந்தது' என பிரதமர் பெருமை பொங்க கூறினார்.