வங்கதேசத்திலிருந்து சட்டவிரோதமாக ஊடுருவல் - பகீர் தகவல் அளிக்கும் உள்துறை அறிக்கை
வங்கதேச எல்லையில் ஊடுருவல் அதிகரித்துள்ளது என உள்துறை அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.;
வங்கதேச எல்லையில் ஊடுருவல் அதிகரித்துள்ளது என உள்துறை அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நம் அண்டை நாடான வங்கதே சேலையில் அதிக அளவில் ஊடுருவல்கள் நடப்பது மிகப்பெரும் சவாலாக உள்ளது என தெரிவித்துள்ளது.
மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள ஆண்டு அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது வங்கதேச எல்லையில் வேலி அமைக்கும் பணி 2023ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் ஆறுகள் குறுக்கிடுவது, எல்லையை ஒட்டி மக்கள் வசிப்பது, தாழ்வான நிலப்பகுதி போன்ற காரணங்களால் எல்லையில் வேலி வைப்பதில் சில சிக்கல்கள் உள்ளன.
கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் வங்கதேசித்தவர்கள் பலர் போலி ஆவணத்துடன் பிடிபட்டுள்ளனர். மேற்குவங்க, அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் சட்டவிரோதமாக நுழைந்த வங்கதேசத்தவர்கள் அதிகம் வசிக்கின்றனர். இவர்கள் போலி ஆவணங்கள் வாயிலாக மோசடியாக ஆதார் உள்ளிட்ட ஆவணங்கள் பெற்றுள்ளனர். வங்கதேசத்தவர்கள் ஊடுருவது சட்டவிரோத செயல்கள் ஈடுபடுவது போன்றவை எல்லை சந்திக்கும் மிகப்பெரிய சவாலாக உள்ளது என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.