இந்தியா பெருமைகளை மீட்டெடுத்து வருகிறது - 12 ஜோதிலிங்கங்களில் ஒன்றை மக்கள் வெளிப்பாட்டுக்கு திறந்து வைத்து பிரதமர் பெருமிதம்
மகா காலேஸ்வரர் கோவில் புதிய வளாகத்தை மக்களுக்கு வெளிப்பாட்டிற்காக அர்ப்பணித்தார் பிரதமர் மோடி.
மகா காலேஸ்வரர் கோவில் புதிய வளாகத்தை மக்களுக்கு வெளிப்பாட்டிற்காக அர்ப்பணித்தார் பிரதமர் மோடி.
உஜ்ஜயினியில் நடைபெற்ற கூட்டத்தில் உரை நிகழ்த்திய போது 'இந்தியா தனது பெருமையையும் வளத்தையும் மீட்டு வருவதாகவும் அதன் காரணமாக உலகமே பயனடையும்' பிரதமர் மோடி பெருமை பொங்க தெரிவித்துள்ளார்.
12 ஜோதிர்லிங்கத் தலங்களில் ஒன்றான மத்திய பிரதேசம் மாநிலம் உஜ்ஜயினியில் உள்ள மகா காலேஸ்வரர் கோவிலை மேம்படுத்தும் பணி 856 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட்டது. 316 கோடி ரூபாய் செலவில் ஆன முதல் கட்ட சீரமைப்பு பணிகள் முடிந்துள்ள நிலையில் புதிய வளாகத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். அங்கு உரை நிகழ்த்திய பிரதமர் கூறியதாவது, 'இந்தியா வளமை மற்றும் பெருமையை மீட்டெடுத்து வருவதாகவும் இதன் பலன் ஒட்டுமொத்த மனித குலத்திற்கு கிடைக்கும், பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளை கடந்தும் அழியாத புகழ் பெற்றுள்ளதாக' பிரதமர் மோடி கூறினார்.