இந்தியாவில் அமைதியாக வாழ்வதற்கு சிறந்த நகரங்கள் பட்டியல்.. தமிழகத்தில் 5 நகரங்கள் தேர்வு.!

இந்தியாவில் அமைதியாக பொதுமக்கள் வாழ்வதற்கு ஏற்ற பத்து நகரங்களில் தமிழகத்தில் 5 நகரங்கள் இடம் பிடித்துள்ளன.

Update: 2021-03-05 02:47 GMT

இந்தியாவில் அமைதியாக பொதுமக்கள் வாழ்வதற்கு ஏற்ற பத்து நகரங்களில் தமிழகத்தில் 5 நகரங்கள் இடம் பிடித்துள்ளன.

மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் ஹர்தீப்சிங் பூரி, நகராட்சிகளின் செயல்திறன் குறியீடு - 2020' மற்றும் அமைதியாக பொதுமக்கள் வாழ்வதற்கான நகரங்கள் பட்டியலை வெளியிட்டார்.




 


இந்த பட்டியலில் 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, 10 லட்சத்திற்கும் மேற்பட்ட வசிக்கும் மக்கள் உள்ள நகரங்கள் மற்றும் குறைவான நகரங்கள் என தனித்தனியாக பிரிக்கப்பட்டு அவற்றில் சிறந்த தலா 10 நகரங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இதில் 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நகரங்கள் பிரிவில் கர்நாடக மாநிலத்தின் தலைநகர் பெங்களூரு முதலிடம் பிடித்துள்ளத.

அதற்கு அடுத்த புனே மற்றும் ஆமதாபாத் நகரங்கள் 2 மற்றும் 3-வது இடங்களை பிடித்துள்ளது. இதில் சென்னைக்கு 4-வது இடம் கிடைத்துள்ளது. 5-வது இடத்தை சூரத், 6-வது இடத்தை நவி மும்பை ஆகியவை பிடித்துள்ளது. மேலும், கோவை 7-வது இடத்தில் உள்ளது. வதோதரா, மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் மற்றும் கிரேட்டர் மும்பை நகரங்கள் 8 முதல் 10 வரையிலான இடங்களை பிடித்துளளது.




 


அதே போன்று 10 லட்சத்துக்கும் குறைவான வசிக்கும் மக்கள் தொகை நகரங்களில் சிம்லா முதலிடமும், புவனேஸ்வர், சில்வாசா, காக்கிநாடா, ஆகியவை அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளத. சேலம் மற்றும் வேலூர் ஆகிய நகரங்கள் 5 மற்றும் 6வது இடத்தை பிடித்துள்ளது. காந்திநகர், குருகிராம், தவான்கீர் ஆகிய நகரங்கள் 7,8,9 இடங்களையும், 10-வது இடத்தை திருச்சி நகரம் பிடித்துள்ளது.




 


தமிழகத்தில் 5 நகரங்கள் மக்கள் வசிக்கும் சிறந்த நகரங்கள் பட்டியலில் இணைந்துள்ளது தமிழக அரசுக்கு மட்டுமின்றி தமிழர்கள் அனைவருக்கும் கிடைத்த அங்கீகாரமும் ஆகும்.

Tags:    

Similar News