41 ஆண்டுகளில் இல்லாத பணவீக்கம் - தள்ளாடும் பிரிட்டன்

பிரிட்டனில் கடந்த 41 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பணவீக்கம் அதிகரித்துள்ளது.;

Update: 2022-11-17 03:33 GMT

பிரிட்டனில் கடந்த 41 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பணவீக்கம் அதிகரித்துள்ளது.

புதிய வரி மற்றும் செலவுத்திட்டங்களை பிரிட்டன் வெளியிட உள்ள நிலையில் தற்போது பணவீக்கம் அதிகரித்துள்ளது. மக்களின் வாழ்க்கை செலவுக்கான நெருக்கடியை தணிக்க பல்வேறு நடவடிக்கையில் எடுக்க வேண்டிய சூழல் அந்நாட்டுக்கு ஏற்பட்டுள்ளது.

பெரும்பாலான பொருளாதர நிபுணர்கள் அக்டோபரில் பிரிட்டனின் சில்லறை விலை பணவீக்கம் 10.7 சதவீதமாக இருக்கும் என கணித்திருந்தனர். ஆனால் அவர்களின் கணிப்பையும் தாண்டி பணவீக்கம் அதிகரித்துள்ளது. உணவு மற்றும் எரிபொருள் ஆகியவற்றின் விலை அதிகரித்ததை அடுத்து 1981 அக்டோபருக்கு பின்னர் பணவீக்கம் அதிக உச்சத்தை எட்டியுள்ளது.

இந்த பிரிட்டன் பணம் வீக்கம் ஆனது 11.00 சதவீதமாக அதிகரித்துள்ளது இந்தியாவில் சில்லறை விலை பணவீக்கம் கடந்த அக்டோபரில் 6.77 சதவீதமாக குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Source - Dinamalar

Similar News