'என் பொண்டாட்டி கிறிஸ்டியனா மாற சொல்றா' - மனைவி, மாமியார், மதபோதகர் என அனைவர் மீது போலீசில் புகார் அளித்த வாலிபர்

கிறிஸ்தவ மதத்திற்கு மாற மனைவி தொல்லை கொடுக்கிறார் என கணவர் போலீசில் புகார் அளித்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.;

Update: 2022-11-19 05:25 GMT

கிறிஸ்தவ மதத்திற்கு மாற மனைவி தொல்லை கொடுக்கிறார் என கணவர் போலீசில் புகார் அளித்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடகாவின் ஹூப்ளி நகரில் வலுக்கட்டாயமாக மதமாற்றம் செய்ய முற்பட்டது தொடர்பாக 15 பேர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. ஹூப்ளி பகுதியைச் சேர்ந்த ஒருவர் அவர் மனைவி கிறிஸ்துவ மதத்திற்கு மாற வற்புறுத்தியதாகவும் அவருடன் வாழ மறுத்ததாகவும் கூறப்படுகிறது.

மேலும் இதில் மத போதகர் தன்னுடைய மாமியார் வீட்டுக்கு வந்து பிரார்த்தனையில் கலந்து கொள்ளுமாறு வற்புறுத்தியதாகவும் அந்த இளைஞர் கூறினார். இதனால் தான் மன உளைச்சலுக்கு உள்ளாகி விட்டதாக தெரிவித்தார். இந்த விவகாரத்தில் மத போதகர்கள் உட்பட 15 பேர் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது மேலும் அந்த புகாரின் பேரில் காவல்துறை சார்பில் தற்போது விசாரணை நடந்து வருகிறது.



Source - Junior Vikatan

Similar News