பணம் போட்டாலும் எடுத்தாலும் இனி கட்டணம் வசூலிக்கப்படுமா?
பணம் போட்டாலும் எடுத்தாலும் இனி கட்டணம் வசூலிக்கப்படுமா?
முடிவுக்கு வந்துவிட்டது சில குறிப்பிட்ட வங்கிகளில் இலவச சேவைகள். அதாவது, சில வங்கிகள் கடந்த நவம்பர் 1 முதல் சில பண பரிவத்தனைக்கு கட்டணங்களை வசூலிக்க ஆரம்பித்துள்ளன. நவம்பர் 1 முதல் பாங்க் ஆப் பரோடா தனது வாடிக்கையாளர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட வரம்பை மீறிய பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்கத் தொடங்கியுள்ளது. கரண்ட் அக்கவுண்ட், ஓவர் டிராஃப்ட், சிசி-யிலிருந்து மெயின் வங்கியின் கிளை, உள்ளூர் அடிப்படை அல்லாத கிளை மற்றும் வெளிநிலைக் கிளை மூலம் மாதத்திற்கு 3 முறை பணத்தை திரும்பப் பெறுவது இப்போது இலவசம். அதே நேரத்தில், நான்காவது முறையாக, ஒரு பரிவர்த்தனைக்கு 150 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும்.
இதே மெட்ரோ நகரங்களில் டெபாசிட் மூன்று முறைக்கு மேல் செய்தால், ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் 50 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும் என அறிவித்துள்ளது. இதுவே மூத்த குடி மக்கள், பென்சன் வாங்குபவர்கள், சேமிப்பு கணக்கு வாடிக்கையாளர்கள், புற நகர் பகுதி வாடிக்கையாளர்களுக்கு 40 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும், என்றும் பாங்க் ஆப் பரோடா அறிவித்துள்ளது.
பணம் எடுக்க எவ்வளவு கட்டணம் ஒரு மாதத்திற்கு மூன்று முறை மட்டுமே இலவசமாக எடுக்க அனுமதிக்கப்படும். எனினும் இதில் ஏ.டி.எம் சேவை இல்லை. மெட்ரோ நகரத்தில் உள்ள சேமிப்பு கணக்கு வாடிக்கையாளர் ஒருவர் மூன்று முறைக்கு மேல் பரிவர்த்தனை செய்தால், ஒரு பரிவர்த்தனைக்கு 125 ரூபாய் கட்டணமாக கொடுக்க வேண்டியிருக்கும். இது கிராமப்புறங்களில், மூத்த குடிமக்கள், பென்சன் பெறுவோர் ஒரு பரிவர்த்தனைக்கு 100 ரூபாய் கொடுக்க வேண்டியிருக்கும் என BOB தரப்பில் இருந்து தெரிவித்துள்ளது.
இதே நடப்புக் கணக்கு, ஓவர் டிராஃப்ட் மற்றும் ரொக்க கிரெடிட், பிற கணக்குகளுக்கு, நவம்பர் 1 முதல் உங்கள் வங்கியின் பிரான்ச் மற்றும் அதர் பிரான்ச்களிலிருந்து ஒரு கணக்கிற்கு 1 லட்சம் ரூபாய்க்கு மேல் டெபாசிட் செய்ய, ரூ.1000 க்கு 1 ரூபாயாக இருக்கும் என்கிறது BOB. ஆக இனி நீங்கள் டெபாசிட் செய்யும்போது இந்த கட்டணத்தினையும் சேர்த்து செலுத்த வேண்டியிருக்கும். ஆக மொத்தத்தில் நீங்கள் டெபாசிட் செய்வதற்கும் BOB இனி கட்டணம் வசூல் செய்யும். மேற்கண்ட வங்கிகள் தவிர, பி.என்.பி, பேங்க் ஆப் இந்தியா, சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா உள்ளிட்ட வங்கிகளும் சில கட்டணங்களை வசூலித்து வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.