ராகுல் வரவேற்பு பேனரில் சாவர்க்கர் படம் - ஓட்டுக்காக குட்டிக்கரணம் போடும் காங்கிரஸ்!

Update: 2022-10-07 12:07 GMT

கர்நாடகாவில் நடைபயணம் மேற்கொண்டுவரும் காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தியை வரவேற்று பேனர் வைக்கப்பட்டது. அதில் சாவர்க்கர் படம் இடம்பெற்றது. ஏற்கனவே கேரளாவிலும் சாவர்க்கர் படத்துடன் வரவேற்பு பேனர் வைக்கப்பட்டிருந்தது. 

ஆர்எஸ்எஸ், பா.ஜ.,வை சேர்ந்தவர்கள் சுதந்திர போராட்ட வீரர் சாவர்க்கரை புகழ்ந்து பேசுவது வழக்கம். ஆனால் காங்கிரஸ் கட்சியினர் சாவர்க்கரை அடிக்கடி விமர்சனம் செய்து வந்தனர்.

இப்போது காங்கிரசும் சாவர்க்கரின் புகைப்படத்தை தங்கள் கட்சியின் நிகழ்வுகளில் பயன்படுத்தி வருகின்றனர். கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டத்தில் ராகுல் நடைபயணத்தின்போது அவரது வருகையை ஒட்டி ராகுலை வரவேற்க வைக்கப்பட்ட பேனரில் அபுல் கலாம் ஆசாத், ரவீந்திரநாத் தாகூர் உள்ளிட்டோர் புகைப்படங்களுடன் சாவர்க்கரின் படமும் அச்சிடப்பட்டிருந்தது. 

இப்போது ஒரு பேனரில் சாவர்க்கரின் படம் மீண்டும் இடம்பெற்றுள்ளது சர்ச்சையைக் கிளப்பி உள்ளது. மாண்டியாவில் உள்ள இந்த பேனரில் ராகுல், கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார், சித்தராமையா ஆகியோரின் படங்களுடன் சாவர்க்கர் படமும் இடம் பெற்றுள்ளது.

Similar News