காஷ்மீர்: பாம்பூரில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் அடையாளம் தெரியாத பயங்கரவாதி சுட்டுக் கொலை.!
காஷ்மீர்: பாம்பூரில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் அடையாளம் தெரியாத பயங்கரவாதி சுட்டுக் கொலை.!
காஷ்மீர் தெற்கு பகுதியில் உள்ள பாம்பூர் பகுதியில் இராணுவத்திற்கும் பயங்கரவாதிகளுக்கும் நடந்த துப்பாக்கிச் சூட்டில் அடையாளம் தெரியாத பயங்கரவாதி ஒருவர் கொல்லப்பட்டார். மேலும் இந்த சம்பவத்தைப் பதிவு செய்யும்போது அங்குத் தாக்குதல் தொடர்ந்து கொண்டிருந்தது.
வியாழக்கிழமை மாலை பாம்பூரில் லல்போரா பகுதியில் பொதுமக்கள் பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதை அடுத்து, பாதுகாப்புப் படையினர் அங்குச் சென்று வெள்ளிக்கிழமை காலை தாக்குதல் நடவடிக்கையை மேற்கொண்டனர். மேலும் பயங்கரவாதி கொல்லப்பட்டதை காவல்துறையின் செய்தி தொடர்பாளர் உறுதி செய்தனர். மேலும், "பயங்கரவாதிகள் கண்மூடித் தனமாக நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இரண்டு அடையாளம் தெரியாத காயமடைந்தனர். அந்த பகுதியில் தேடுதல் பணியும் நடந்து கொண்டிருக்கின்றது," என்று வியாழக்கிழமை இரவில் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.
வியாழக்கிழமை இரவில் அவந்தி போரா பகுதியில் உள்ள ட்ரால் பேருந்து நிலையத்தில் வைத்து முஹம்மத் அயூப் அஹாங்கர் என்ற ஒரு கடைக்காரர் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். பின்னர் அவர் அருகே இருந்த மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார், ஆனால் அவர் இறந்து விட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. மேலும் புல்வாமாவில் முஹம்மத் அஸ்லாம் வாணி என்ற ஓட்டுநர் மீதும் பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
"PS ட்ரால் மற்றும் PS புல்வாமா கீழ் உள்ள சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணை நடந்து கொண்டிருக்கின்றது," என்று காவல்துறை செய்தி தொடர்பாளர் கூறினார். மேலும் இந்த ஆண்டு முன்னதாக இதுவரை ஜம்மு & காஷ்மீரில் 200 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக DGP தில்பாக் சிங் தெரிவித்தார். அதில் 190 பயங்கரவாதிகள் மட்டும் காஷ்மீரில் கொல்லப்பட்டுள்ளனர்.