பா.ஜ.க'வினரிடம் பகிரங்க மன்னிப்பு கேட்ட மம்தா பானர்ஜி - ஏன் தெரியுமா?

குடியரசு தலைவர் திரௌபதி முர்மு குறித்து மேற்குவங்க அமைச்சர் அகில்கிரி விமர்சனம் செய்ததற்கு பகிரங்க மன்னிப்பு கூறியுள்ளார் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி.;

Update: 2022-11-15 03:08 GMT

குடியரசு தலைவர் திரௌபதி முர்மு குறித்து மேற்குவங்க அமைச்சர் அகில்கிரி விமர்சனம் செய்ததற்கு பகிரங்க மன்னிப்பு கூறியுள்ளார் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி.

மேற்குவங்க அமைச்சர் அகில கிரி திரௌபதியின் உருவத்தை குறித்து பேசிய பேச்சு சர்ச்சையாக வெடித்தது, அமைச்சர் அகில் கிரிக்கு எதிராக மேற்குவங்கம், ஒடிசாவில் பா.ஜ.க'வினர் போராட்டம் நடத்தினர்.

ஒடிசா மாநிலத்தின் பழங்குடி வகுப்பைச் சேர்ந்த திரௌபதி குடியரசுத் தலைவர் ஆனது மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு பிடிக்கவில்லை எனவும் இதனால் அகில் கிரி இவ்வாறு பேசி உள்ளார் என பா.ஜ.க'வினர் கண்டனம் தெரிவித்தனர்.

தற்பொழுது அகில் கிரியின் பேச்சை ஏற்க முடியாது என்று கூறி அவரது பேச்சுக்கு மன்னிப்பு கோரி உள்ளார் மம்தா பானர்ஜி. அவரது பேச்சை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கடுமையாக கண்டிக்கிறது எனவும் அமைச்சர் கிரியின் செயல் தவறானது அவர் என்னுடைய கட்சியை சேர்ந்தவராக தலைவர் என்கிற அடிப்படையில் நான் மன்னிப்பு கூறுகிறேன் எனவும் மம்தா பானர்ஜி மன்னிப்பு கேட்டுள்ளார்.


Source - One India

Similar News