வாட்ஸ்அப்பில் சிவன் படம் வைத்த ஷரீக் - குக்கர் குண்டு வெடிப்பு குற்றவாளி பற்றி வெளியான பகீர் தகவல்!
கர்நாடகாவின் மங்களூருவில் கடந்த 19-ம் தேதி ஆட்டோவில் குக்கர் குண்டு வெடித்தது. குக்கர் குண்டுடன் ஆட்டோவில் பயணித்த முகமது ஷரீக் (24) தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
ஷரீக், போலி ஆதார் அட்டை மூலம் சிம்கார்டு வாங்கியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஷிமோகாவில் குண்டுவெடித்து அவர் ஒத்திகையில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது.
மங்களூரு போலீஸாரிடம் விசாரித்தபோது, 'ஷரீக் திட்டமிட்டு தனது மத அடையாளத்தை மறைத்து செயல்பட்டுள்ளார். தனது வாட்ஸ்அப் முகப்பு படமாக ஆதியோகி சிவன் படத்தை வைத்துள்ளார்.
தனது பெயரை பிரேம்ராஜ், அருண்குமார் என கூறி விடுதிகளில் தங்கியுள்ளார். தமிழகத்தில் கோவை, ஊட்டி மற்றும் கேரளாவுக்கும் சென்று வந்துள்ளார் என்றனர்.
கோவை கோட்டைமேட்டில் நடந்த கார் சிலிண்டர் வெடிப்புடன் இதற்கு தொடர்பு இருக்குமோ என்றும் சந்தேகம் எழுந்துள்ளது. இந்த சதி பற்றி விசாரிக்க மங்களூருவில் இருந்து கோவை வந்த தனிப்படை போலீஸார் என்ஐஏ அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.
என்ஐஏ அதிகாரிகளால், தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள ஐஎஸ்ஐஎஸ் ஆதரவாளர்கள் அப்துல் மதீன் தகா, அரபாத் அலி ஆகியோருடன் தொடர்பில் இருந்துள்ளார்.
Input From: TimesOfindia