டாக்டர் படிப்புக்கு பாண்ட் பாலிசி முடிவு - மத்திய சுகாதார துறை அமைச்சகம் நடவடிக்கை!

டாக்டர் படிப்புக்கு வழங்குவது பாண்ட் பாலிசி இனி முடிவுக்கு வருகிறது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்து இருக்கிறது.

Update: 2022-11-08 05:39 GMT

நமது நாட்டில் டாக்டர்களுக்கு பாண்ட் பாலிசி நடைமுறையில் இருந்து வருகிறது. அதன்படி டாக்டர்கள் தங்களுடைய பட்டப்படிப்பை முடித்தவுடன் பட்டம் மேற்படிப்பை முடித்த உடனும் குறிப்பிட்ட கால கட்டத்திற்கு அரசு ஆஸ்பத்திரிகளில் கட்டாயம் வேலை பார்க்க வேண்டும். இதன்படி டாக்டர்கள் செயல்பட தவறினால் அவர்கள் அந்தந்த மாநிலம் அல்லது யூனியன் பிரதேச நிர்வகித்துள்ள அபராத தொகையை அந்த மாநிலத்திற்கு அல்லது மருத்துவ கல்லூரிக்கு செலுத்த வேண்டும் என்று நடைமுறை தற்போது வரை இருந்து வருகிறது.


இது தொடர்பான ஒரு வழக்கை உயர் நீதிமன்றம் விசாரித்து, 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தீர்ப்பளித்தது. டாக்டர்களுக்கான மாநிலங்களில் பிடுங்க பத்திரக் கொள்கை செல்லும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் சில மாநிலங்களில் இது மிகவும் கடுமையான எதிர்க்கப்பட்டது. இது குறித்த ஆராய்ந்து அறிக்கை அளிப்பதற்கான சுகாதார தலைமை இயக்குனர், முதன்மை ஆலோசகர் அத்தாணி தலைமையில் மத்திய சுகாதார அமைச்சகம் ஒரு குழுவை அமைத்தது. இந்த குழு தனது அறிக்கையை மே 2020 மாதம் அளித்தது. இதில் மருத்துவ கமிஷன் பார்வைக்காக கருத்துக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.


பல்வேறு மாநிலங்களில் மாணவர்களுக்கான பத்திர நிபந்தனை பிரச்சனைகள் குறித்து அறிக்கையில் தெளிவான தீர்வு இல்லை என்பது உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் தேசிய மருத்துவ கமிஷன் தெரிவித்தது. அதனை தொடர்ந்து இந்த பிரச்சினையை மத்திய சுகாதார அமைச்சகம் முழுமையாக ஆய்வு செய்தது. தமிழ்நாட்டில் ஐந்து லட்சம் உத்தரகாண்டில் ஒரு கோடி என நிபந்தனை மீறுபவருக்கு அபராதம் மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடுகிறது. இந்நிலையில் தேசிய கமிஷன் பரிந்துரை அடிப்படையில் பிணைய பத்திரக் கொள்கையாக பாண்ட் பாலிசி நீக்குவதற்கான வழிகாட்டுதல்களை இறுதி செய்வதில் மத்திய அமைச்சகம் செயல்பட்டு வருகிறது.

Input & Image courtesy: Thanthi News

Tags:    

Similar News