மகாகவி பாரதியாரின் குடும்பத்தை காசியில் சந்தித்த அமைச்சர் தர்மேந்திர பிரதான் - பாரதியாரை கொண்டாடும் மத்திய அரசு
காசியில் மகாகவி பாரதியாரின் குடும்பத்தினரை சந்தித்து பேசினார் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்.;
காசியில் மகாகவி பாரதியாரின் குடும்பத்தினரை சந்தித்து பேசினார் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்.
மகாகவி பாரதியாரின் மருமகனான கே.வி.கிருஷ்ணன் காசியில் அனுமான் காட் கரையில் உள்ளத்தில் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். தற்போது 96 வயதான கே.வி.கிருஷ்ணனையும் அவரது குடும்பத்தினரை மத்திய கல்வி, திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் துணை அமைச்சர் தர்மேந்திர பிரதான் நேற்று சந்தித்தார்.
இந்த சந்திப்பை குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், 'தமிழ் இலக்கிய உலகின் மிகப்பெரிய ஆளுமையான மகாகவி பாரதியாரின் காசி இல்லத்துக்கு சென்றது ஒரு புனித யாத்திரை போன்றது. பாரதியாரின் மருமகனான கே.வி.கிருஷ்ணன் மற்றும் அவரது குடும்பத்தினரை காசியில் சந்தித்ததில் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன்' என பதிவிட்டுள்ளார்.
'என்றென்றும் அடுத்த தலைமுறைக்கு உத்வேகமாக இருப்பார் பாரதியார்' என மகாகவி பாரதியாரை கொண்டாடும் விதமாகவும் பதிவிட்டுள்ளார்.