கடவுளின் அவதாரம்தான் பிரதமர் மோடி - உத்திர பிரதேச அமைச்சர் புகழாரம்
பிரதமர் மோடி கடவுளின் அவதாரம் என்று உத்தர பிரதேச பெண் அமைச்சர் குலாப் தேவி அவர்கள் கூறியிருக்கிறார்.
எதிர்க்கட்சிகள் புகார்:
இந்திய வம்சவலியை சேர்ந்த ரிஷி சுனக் இங்கிலாந்து பிரதமராக பொறுப்பேற்று இருக்கிறார். இந்திய வம்சவளியை சேர்ந்த அவர் இங்கிலாந்தின் பிரதமராக அந்நாட்டு பிரஜை அல்லாமல் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்திய வம்சாவளி பிரதமர் என்று பெருமையும் அவர் பெற்று இருக்கிறார். இதை போல் இந்தியாவிலும் சிறுபான்மை இனத்தை சேர்ந்த ஒருவர் பிரதமராக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கூறி இருந்து வருகிறார்கள். எதிர்க்கட்சிகளின் பதிலுக்கு தற்போது உத்தர பிரதேச பெண் அமைச்சர பதில் கூறி இருக்கிறார்.
கடவுளின் பிரதிநிதி மோடி:
எதிர்க்கட்சிகளின் இந்த கருத்து குறித்து உத்தரபிரதேசம் மேல்நிலைக் கல்வித் துறை இணை அமைச்சர் குலாம் தேவியிடம் நேற்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள். அப்பொழுது அவர்களுடைய கேள்விக்கு பதில் அளிக்கையில் பிரதமர் மோடி ஒரு அவதாரத்தை போன்றவர். அசாத்திய திறமைகளைக் கொண்ட ஒரு மனிதர். அவருடன் யாரும் போட்டி போட முடியாது. அவர் விரும்பினால் அவர் உயிருடன் இருக்கும் வரை பிரதமராக இருக்கலாம். யுகத்தில் எதுவும் நடக்காது. அவ்வளவு அசாதாரணமான ஆளுமை, அவர் கடவுள் அவரை தனது பிரதிநிதியாக அனுப்பியுள்ளார்.
எனவே இவ்வாறு பிரதமர் மோடி பற்றி அவர் தன்னுடைய கருத்துக்களை பதிவு செய்து இருக்கிறார். பிரதமர் மோடி அவர்களை முழு தேசமும் தற்போது பின்பற்றி வருகிறது என குலாப் தேவி கூறி, இதைவிட பெரிய அங்கீகாரம் வேறு என்ன இருக்க முடியும். தலைவரின் தலைமைத்துவத்தின் கீழ், அனைத்து மக்களும் தங்களுடைய செயல்பாடுகளை கட்சிதமாக செய்து வருகிறார்கள் என்று அவர் தன்னுடைய பதிலை பதிவு செய்து இருக்கிறார்கள்.
Input & Image courtesy: News