முதல்வர் பதவியை தக்க வைக்க என்ன வேண்டுமாலும் செய்வர் நிதிஷ்குமார் - போட்டுத்தாக்கிய அமித்ஷா

முதல்வர் பதவிக்காக ஐந்து முறை அணி மாறிவிட்டார் நிதிஷ்குமார் என உள்துறை அமைச்சர் அமித்ஷா கடுமையாக விமர்சித்துள்ளார்.

Update: 2022-10-12 09:16 GMT

முதல்வர் பதவிக்காக ஐந்து முறை அணி மாறிவிட்டார் நிதிஷ்குமார் என உள்துறை அமைச்சர் அமித்ஷா கடுமையாக விமர்சித்துள்ளார்.

பீகார் மாநிலம் சிதாப் தியாராவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியதாவது, காங்கிரசை எதிர்த்து நெருக்கடிகாலத்தில் போராட்டம் நடத்தி சிறை சென்றவர் ஜெயபிரகாஷ் நாராயணன். அவர் இயக்கத்தால் பயனடைந்தோர் ஆட்சி அதிகாரத்திற்காக அதே காங்கிரஸ் கட்சியுடன் கைகோர்த்திருப்பதாக சாடினார்.

அதிகாரத்திற்காக ஜெயப்பிரகாஷ் நாராயணன் எதையும் செய்ததில்லை ஆனால் அதிகாரத்திற்காக ஐந்து முறை கூட்டணி மாறியவர்தான் தற்போது பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார்' என அமித்ஷா கூறினார்.



Source - Polimer News

Similar News