70 வருஷமா 9 விமான நிலையம் மட்டும்தான், ஆனா பா.ஜ.க ஆட்சியில் 8 புது விமான நிலையங்கள் அமைத்துள்ளோம் - கெத்து காட்டும் பிரதமர் மோடி
'திட்டங்களைக் கிடப்பில் போடும் சகாப்தம் மறைந்தது' என பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.;
'திட்டங்களைக் கிடப்பில் போடும் சகாப்தம் மறைந்தது' என பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
அருணாச்சலப் பிரதேசம் இட்டா நகருக்கு அருகே 640 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட விமான நிலையத்தை பிரதமர் மோடி துவங்கி வைத்தார். மேலும் 8200 கோடி ரூபாய் மதிப்பில் கட்டமைக்கப்பட்ட 600 மெகா வாட்ஸ் திறன் கொண்ட அனல் நீர் மின் நிலையத்தையும் பிரதமர் மோடி நாட்டுக்கு அர்பணித்தார்.
இந்த சிறப்பான நிகழ்ச்சியில் பேசிய அவர் கூறியதாவது, 'நாடு சுதந்திரம் அடைந்து முதல் 70 ஆண்டுகளில் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்பது விமான நிலையங்கள் தான் கட்டப்பட்டது, ஆனால் கடந்த 8 ஆண்டுகால பா.ஜ.க ஆட்சியில் கடந்த எட்டு ஆண்டுகளில் மட்டும் புதிதாக ஏழு விமான நிலையங்களை உருவாக்கியுள்ளோம்' என பெருமிதத்துடன் கூறினார்.