பிரிவினைக்கு ஆதரவளிக்கும் பாகிஸ்தான் - இந்துக்களுக்கு எதிராக கலவரம் தூண்ட முயற்சி!

Update: 2022-11-04 03:33 GMT

சதி வலையில் சீக்கியர்கள் 

காலிஸ்தான் இயக்கம் சீக்கியர்களுக்கு தனி நாடு உருவாக்கும் நோக்குடன் உருவாக்கப்பட்டது. காலிஸ்தான் தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் ஆதரவளித்து வருகிறது. இந்திய சீக்கியர்களிடம் காலிஸ்தான் பெயரில் நட்பு பாராட்டி, பாகிஸ்தான் நெருங்கி வருகிறது. இதில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் அதிக தீவிரம் காட்டி வருகின்றனர். இந்த சதி வலையில் பாகிஸ்தானின் லாகூர் உள்ளிட்ட குருத்வாராக்களுக்கு வரும் இந்திய சீக்கியர்களை சிக்க வைக்க முயற்சிப்பதாக தெரிய வந்துள்ளது.

உளவுத்துறை எச்சரிக்கை 

லாகூரின் பஞ்சாப் சாஹிப் குருத்வாராவில் இந்தியாவிலிருந்து வந்த சில முக்கிய சீக்கியர்களை பாகிஸ்தான் தீவிரவாதிகள் சந்தித்து பேசியுள்ளனர். இங்குள்ள குருத்வாராக்களை சுற்றியுள்ள பகுதிகளிலும் இந்திய சீக்கியர்களை அவர்கள் சந்தித்து பேசுகின்றனர். இந்த சந்திப்புகளில் இந்திய அரசுக்கும் இந்துக்களுக்கும் எதிராக இந்திய சீக்கியர்களை திசை திருப்பும் வேலைகளிலும் அவர்கள் இறங்கியுள்ளனர் என இந்திய உளவுத் துறை அதிகாரிகள் மத்திய அரசுக்கு அளித்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அமைதியை குலைக்க முயற்சி 

மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணியை தோற்கடிப்பது பாகிஸ்தானின் நோக்கமாக உள்ளது. மக்களிடையே கலவரங்களை ஏற்படுத்தி இந்தியாவில் அமைதியை குலைக்கவும் முயற்சிக்கிறது.

Input From: dhyeyaias

Similar News