ட்ரான்கள் மூலம் ஆயுதம், போதை பொருள்கள் அனுப்பும் பாகிஸ்தான் - இதுவரை 191 ட்ரான்களை பாதுகாப்பு படையினர் கைப்பற்றினர்

ஆறு மாதங்களுக்குள் இந்தியாவிற்குள் பாகிஸ்தான் அத்துமீறி 191 வகையான ட்ரான்களை அனுப்பி உள்ளது தெரிய வந்துள்ளது.

Update: 2022-10-13 05:09 GMT

ஆறு மாதங்களுக்குள் இந்தியாவிற்குள் பாகிஸ்தான் அத்துமீறி 191 வகையான ட்ரான்களை அனுப்பி உள்ளது தெரிய வந்துள்ளது.

இது தொடர்பாக பாதுகாப்பு படையினர் அளித்த தகவல்கள் அடிப்படையில் மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில் 2022 ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் செப்டம்பர் 30-ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் இந்திய பகுதிக்கு 191 ட்ரான்கள் நுழைந்துள்ளன, அதில் 171 ட்ரான்கள் இந்தியா, பாகிஸ்தான் எல்லையில் உள்ள பஞ்சாப் பார்டர் வழியாகவும். 20 ட்ரான்கள் ஜம்மு காஷ்மீர் வழியாகவும் நுழைந்துள்ளன.

அதில் ஏழு ட்ரான்களை எல்லை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தியுள்ளனர், அவற்றிலிருந்து ரைபிள்கள், பிஸ்டல்கள், கையெறி குண்டுகள், தோட்டாக்கள் போதை பொருட்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஜம்மு மற்றும் பஞ்சாப்பிற்குள் ஆயுதங்கள், வெடி மருந்துகள், போதைப் பொருள்கள் ஆகியவை சர்வதேச எல்லை வழியாக நடத்துவதற்கு இந்த ட்ரான்களை பாகிஸ்தான் பயன்படுத்தி வருவதாக எல்லை பாதுகாப்பு தெரிவித்தனர்.



Source - Dinamalar

Similar News