காசியும் தமிழகமும் காலத்தால் அழியாத நமது கலாச்சாரம் மற்றும் நாகரிகத்தின் மையங்கள் - பிரதமர் மோடி புகழாரம்!

Update: 2022-11-20 07:05 GMT

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் 'காசி தமிழ் சங்கமம்' என்னும் ஒரு மாத கால நிகழ்ச்சியை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். நாட்டின் மிகப் பழமையான, கல்வி முக்கியத்துவம் வாய்ந்த தமிழகத்திற்கும் காசிக்கும் இடையே உள்ள பழங்காலத் தொடர்பைக் கொண்டாடுவதும், அந்தப் பெருமையை மீட்டெடுத்து உறுதிப்படுத்துவதும், இந்த திட்டத்தின் நோக்கமாகும். தமிழகத்தில் இருந்து 2500க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் காசிக்கு வருகை தரவுள்ளனர். இந்த தொடக்க நிகழ்ச்சியின் போது, 13 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட 'திருக்குறள்' புத்தகத்தையும் பிரதமர் வெளியிட்டார். ஆரத்தியைத் தொடர்ந்து நடைபெற்ற கலாச்சார நிகழ்ச்சிகளையும் அவர் பார்வையிட்டார்.

காசிக்கும் தமிழகத்துக்கும் இடையே உள்ள தொடர்பை விளக்கிய பிரதமர், ஒருபுறம் காசி இந்தியாவின் கலாச்சார தலைநகரம் என்றும், அதேசமயம் தமிழ்நாடு மற்றும் தமிழ் கலாச்சாரம் இந்தியாவின் தொன்மை மற்றும் பெருமையின் மையம் என்றும் கூறினார். கங்கை மற்றும் யமுனை நதிகள் சங்கமிக்கும் இடத்தை ஒப்பிட்ட பிரதமர், காசி-தமிழ் சங்கமம் அதே அளவு புனிதமானது, அது முடிவில்லாத வாய்ப்புகளையும் வலிமையையும் தன்னுள் அடக்கிக் கொண்டுள்ளது என்றார். இந்த முக்கியமான நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த கல்வி அமைச்சகம், உத்தரபிரதேச அரசு ஆகியவற்றை பிரதமர் பாராட்டினார். இதற்கு ஆதரவை வழங்கியதற்காக சென்னை ஐஐடி, பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் போன்ற மத்திய பல்கலைக்கழகங்களுக்கு அவர் நன்றி தெரிவித்தார். குறிப்பாக காசி மற்றும் தமிழ்நாட்டின் மாணவர்கள் மற்றும் அறிஞர்களுக்கு பிரதமர் நன்றி தெரிவித்தார்.

காசியும் தமிழகமும் காலத்தால் அழியாத நமது கலாச்சாரம் மற்றும் நாகரிகத்தின் மையங்கள் என்று பிரதமர் குறிப்பிட்டார். சமஸ்கிருதம் மற்றும் தமிழ் ஆகிய இரண்டும் மிகவும் பழமையான, இன்றும் உயிர்ப்புடன் திகழும் மொழிகளாகும் என்று அவர் கூறினார். காசியில் பாபா விஸ்வநாதர் இருக்கிறார், தமிழகத்தில் ராமேஸ்வரத்தின் அருள் உள்ளது. காசி, தமிழகம் இரண்டுமே சிவனின் அருளைப் பெற்றுள்ளன. இசையோ, இலக்கியமோ, கலையோ எதுவாக இருந்தாலும், காசியும், தமிழகமும் எப்போதும் அவற்றின் ஆதாரமாக விளங்குகிறது என்று பிரதமர் குறிப்பிட்டார்.

Input From: APB

Similar News