இளைஞர்களுக்கு டஃப் கொடுக்கும் பிரதமர் மோடி - 45 மணி நேரத்தில் 20 நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்
45 மணி நேரத்தில் 20 நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி பங்கேற்கவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.;
45 மணி நேரத்தில் 20 நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி பங்கேற்கவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தோனேசியாவில் 45 மணி நேரம் தங்கி இருக்கும் பிரதமர் மோடி 20 நிகழ்ச்சிகளில் பங்குபெற இருக்கிறார். தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனிசியாவின் பாலி தீவில் 'ஜி 20' மாநாடு இன்று துவங்குகிறது.
இதில் பங்கேற்க செல்லும் பிரதமர் மோடி 10 நாடுகளின் தலைவர்களை சந்தித்து பேசுகிறார் பின் இந்தோனேசியாவில் வசிக்கும் இந்தியர்களுடன் கலந்துரையாடலில் பங்கேற்று பேசுகிறார். மாநாட்டில் உணவு மற்றும் எரிசக்தி பாதுகாப்பு, டிஜிட்டல் மாற்றம் மற்றும் சுகாதாரம் ஆகிய அம்சங்கள் குறித்து பிரதமர் மோடி பங்கேற்று பேசுகிறார்.
இதனை தொடர்ந்து உலக பொருளாதாரம், எரிசக்தி, சுற்றுச் சூழல் டிஜிட்டல் மாற்றம் குறித்த உலக நாடுகளின் தலைவர்களுடன் ஆலோசனை நடத்துகிறார் பிரதமர் மோடி. இந்தோனீசியாவில் இருக்கும் 45 மணி நேரத்தில் 20 நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளதாக பிரதமர் மோடியின் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.