நாளை காசி சங்கம கோலாகலம் - பிரதமர் மோடி துவங்கி வைக்கிறார்
காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை வாரணாசியில் பிரதமர் மோடி நாளை துவக்கி வைக்கிறார்.;
காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை வாரணாசியில் பிரதமர் மோடி நாளை துவக்கி வைக்கிறார்.
அருணாச்சல பிரதேசம் மாநிலம் இடா நகரில் புதிய விமான நிலையத்தை அவர் நாட்டுக்கு நாளை அர்ப்பணிக்கிறார். இந்த நிகழ்ச்சிகள் தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்ட குறிப்பில் இடா நகரில் புதிய விமான நிலையம் மற்றும் 600 மெகாவாட் மின் உற்பத்திக்கான நீர் மின் நிலையம் ஆகியவற்றை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து வாரணாசி செல்ல உள்ள பிரதமர் அங்கு காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை தொடங்கி வைக்கிறார். தமிழின் பழங்கால தொன்மையுடன் காசிக்கு உள்ள தொடர்பை போற்றும் வகையில் ஒரு மாத காலம் பல்வேறு நிகழ்ச்சிகள் வாரணாசியில் நடைபெற உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.