நாளை விண்ணில் பாய்கிறது PSLV சி-49 ராக்கெட் - 26 மணி நேர கவுண்ட்டவுன் தொடங்கியது.!
நாளை விண்ணில் பாய்கிறது PSLV சி-49 ராக்கெட் - 26 மணி நேர கவுண்ட்டவுன் தொடங்கியது.!
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து PSLV சி-49 ராக்கெட் நாளை மாலை சரியாக 3.02 மணி அளவில் விண்ணில் பாய்வதற்கான கவுண்ட்டவுன் தொடங்கியது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து, நாளை மாலை 3.02 மணிக்கு 1வது ஏவுதளத்தில் இருந்து, PSLV சி-49 ராக்கெட் விண்ணில் பாய்கிறது. இந்த ராக்கெட்டில் இந்தியாவுக்கு சொந்தமான EOS 01 என்ற பூமி கண்காணிப்பு செயற்கைகோள் பொருத்தப்பட்டு உள்ளது.
மேலும் நாளை விண்வெளிக்கு செல்லும் ராக்கெட்டில் வணிக ரீதியிலான 9 செயற்கைகோள்களும் விண்ணுக்கு அனுப்பப்பட உள்ளது. இதில் லிதுவேனியா நாட்டைச் சேர்ந்த 1 தொழில்நுட்ப கண்டுப்பிடிப்பு செயற்கைகோள், லக்சம்பர்க் நாட்டைச் சேர்ந்த கிளியோஸ் ஸ்பேஸின் 4 கடல்சார் பயன்பாட்டு செயற்கைகோள்கள் மற்றும் அமெரிக்காவின் 4 லெமூர் செயற்கைகோள்களும் உள்ளடக்கி உள்ளன.
PSLV சி-49 ராக்கெட்டின் முதல் நிலையில் திட எரிபொருளும், 2ம் நிலையில் திரவ எரிபொருளும் நிரப்பப்பட்டு உள்ளது. 44.4 மீட்டர் உயரம் கொண்ட PSLV சி-49 ராக்கெட், இந்தியாவின் 51வது பி.எஸ்.எல்.வி. ராக்கெட் ஆகும். தொடர்ந்து ராக்கெட் மற்றும் செயற்கைகோளின் செயல்பாடுகளை விஞ்ஞானிகள் தீவிரமாக கண்காணித்து வந்தனர். இந்நிலையில் பி.எஸ்.எல்.வி. சி-49 ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்கான கவுண்ட்டவுன் இன்று தொடங்கியது. 26 மணி நேர கவுண்ட்டவுனை முடித்து கொண்டு நாளை மாலை 3.02 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து PSLV சி-49 ராக்கெட் விண்ணில் செலுத்தப்படுகிறது.